For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டை தூக்கி எறிந்து.. கோபத்தில் சீறிய கிறிஸ் கெயில்.. பரபரப்பை கிளப்பிய தருணம்.. என்ன நடந்தது?

அபுதாபி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெயில் அதிரடி ஆட்டத்தால் மிரள வைத்தார்.

இந்தப் போட்டியில் அவர் ஆட்டமிழந்த போது தன் பேட்டை தூக்கி எறிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் சமாதானம் அடைந்து தன் விக்கெட்டை வீழ்த்திய ஆர்ச்சருடன் கை கொடுத்து நட்பை வெளிப்படுத்தினார்.

1001.. உச்சம் தொட்ட கிறிஸ் கெயில்.. எந்த வீரரும் தொட முடியாத ரெக்கார்டு.. வாயை பிளந்த ரசிகர்கள்!1001.. உச்சம் தொட்ட கிறிஸ் கெயில்.. எந்த வீரரும் தொட முடியாத ரெக்கார்டு.. வாயை பிளந்த ரசிகர்கள்!

கிறிஸ் கெயில் ஆட்டம்

கிறிஸ் கெயில் ஆட்டம்

இந்தப் போட்டியில் கிறிஸ் கெயில் அதிரடி ஆட்டம் ஆடி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். அவரை அவுட் ஆக்க ஸ்டீவ் ஸ்மித் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. மற்ற பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தாலும் அவர் நிலைத்து நின்று ரன் குவித்தார்.

கடுப்பான கெயில்

கடுப்பான கெயில்

கிறிஸ் கெயில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய யார்க்கரில் தடுமாறி பவுல்டு அவுட் ஆனார். அவுட் ஆனதை உணர்ந்த உடன் தன் பேட்டை விசிறி எறிந்தார் கெயில். தன் ஏமாற்றத்தை அவ்வாறு வெளிப்படுத்தினார் கெயில். அவரது செயல் பரபரப்பை கிளப்பியது.

சமாதானம்

சமாதானம்

எனினும், அடுத்த சில வினாடிகளில் ஜோப்ரா ஆர்ச்சர் அவருக்கு கை கொடுத்தார். அவரது கையை பிடித்து அவரது பாராட்டை ஏற்றுக் கொண்டார் கெயில். அத்துடன் அந்த கோபமான தருணம் முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் கெயில் சாதனையும் செய்து இருந்தார்.

1000 சிக்ஸர்

1000 சிக்ஸர்

டி20 போட்டிகளில் 1000 சிக்ஸர் என்ற மைல்கல்லை எட்டினார் கிறிஸ் கெயில். இந்த மைல்கல்லை எட்டும் முதல் வீரர் கெயில் தான், இது கிரிக்கெட் உலகில் மாபெரும் சாதனையாக கருதப்படுகிறது. வேறு எந்த வீரரும் இதை தொட முடியாது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Saturday, October 31, 2020, 0:02 [IST]
Other articles published on Oct 31, 2020
English summary
IPL 2020 KXIP vs RR : Chris Gayle got angry after getting out at 99
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X