For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்தை தூக்கி எறிந்த பூரன்.. கீழே சுருண்டு விழுந்த விஜய்.. ஓடி வந்த பிஸியோ.. பதற வைத்த தருணம்!

துபாய் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் ஷங்கர் தலையில் பந்து பலமாக தாக்கியது.

அவர் கீழே சுருண்டு விழுந்தார். அந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு முதலுதவி செய்ய உடனடியாக பிஸியோதெரபிஸ்ட் ஓடி வந்தார்.

லீக் போட்டி

லீக் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் 43 வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மந்தமான ஆடுகளம் என்பதால் இரு அணிகளும் நிறுத்தி, நிதானமாகவே ரன் சேர்த்தன.

பஞ்சாப் ஸ்கோர்

பஞ்சாப் ஸ்கோர்

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது குறைவான ஸ்கோர் என விமர்சனம் செய்யப்பட்டது. ஆனாலும், வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் பந்து வீசியது பஞ்சாப் அணி.

விஜய் ஷங்கர் பேட்டிங்

விஜய் ஷங்கர் பேட்டிங்

ஹைதராபாத் அணியின் வார்னர் 35, பேர்ஸ்டோ 19 ரன்கள் எடுத்தனர். அடுத்து வரிசையாக விக்கெட்கள் சரிய விஜய் ஷங்கர் அணியை காப்பாற்ற பொறுப்பாக ஆடி வந்தார். அவர் 20 ரன்களை கடந்து இலக்கை நெருங்கி ஆடி வந்தார்.

பலத்த அடி

பலத்த அடி

அர்ஷ்தீப் சிங் வீசிய 18வது ஓவரின் 5வது பந்தை பாயின்ட் திசையில் அடித்து விட்டு ஒரு ரன் ஓடினார் விஜய் ஷங்கர். பந்தை எடுத்த நிக்கோலஸ் பூரன் நேராக நான்- ஸ்ட்ரைக்கர் திசையை நோக்கி எறிந்தார். அப்போது பந்து ரன் ஓடி வந்த விஜய் ஷங்கர் இடது பக்க தலையில் பலமாக தாக்கியது.

ஹெல்மட் அணியாமல்..

ஹெல்மட் அணியாமல்..

விஜய் ஷங்கர் அப்படியே கீழே சுருண்டு விழுந்தார். அவரது நிலையை கண்ட அனைவரும் பதற்றம் அடைந்தனர். பிஸியோதெரபிஸ்ட் உடனடியாக ஓடி வந்தார். அதன் பின் விஜய் ஷங்கர் வலியில் இருந்து மீண்டு மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது தான் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

பெரும் விக்கெட் சரிவு

பெரும் விக்கெட் சரிவு

அடுத்த பந்திலேயே விஜய் ஷங்கர் ஆட்டமிழந்தது தான் இதில் பெரும் சோகம். அவர் விக்கெட் விழுந்த உடன் ஹைதராபாத் அணி அடுத்த ஐந்து விக்கெட்களை 2 ஓவர்களில் இழந்தது. 4 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்களை இழந்தது ஹைதராபாத்.

ஹைதராபாத் தோல்வி

ஹைதராபாத் தோல்வி

127 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் விக்கெட்களை இழந்த ஹைதராபாத் அணி 114 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. 12 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் ஹைதராபாத் மோசமான நிலையை அடைந்துள்ளது.

Story first published: Sunday, October 25, 2020, 0:48 [IST]
Other articles published on Oct 25, 2020
English summary
IPL 2020 KXIP vs SRH : Vijay Shankar hit on his left side of head
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X