For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லுல எதை வேணும்னாலும் பரிசோதனை செய்யலாம்... அது ஆய்வுக்கூடம் மாதிரி... அஸ்வின் உற்சாகம்

துபாய் : இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Recommended Video

Malinga to miss IPL 2020, Pattinson replaces him | OneIndia Tamil

இதுவரை 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 125 விக்கெட்டுகளை கைகொண்டுள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் ஆய்வுக்கூடம் போன்றது என்றும் அதில் எதை வேண்டுமானாலும் பரிசோதனை செய்து பார்க்கலாம் என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.

முதல்முறையாக கேப்டன்... தோனி, கோலி, ரோகித்கிட்ட இருந்துதான் கத்துக்கணும்... கே.எல். ராகுல் உறுதிமுதல்முறையாக கேப்டன்... தோனி, கோலி, ரோகித்கிட்ட இருந்துதான் கத்துக்கணும்... கே.எல். ராகுல் உறுதி

உற்சாகமாக உணர்வதாக கருத்து

உற்சாகமாக உணர்வதாக கருத்து

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிவந்த ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சீசனிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இதுவரை 134 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை கைகொண்டுள்ள அஸ்வின், டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு அதிகளவில் காரணமாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. இதனிடையே டெல்லி கேபிடல்சில் இணைந்துள்ளது உற்சாகத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார் அஸ்வின்.

பயிற்சி முகாமில் உற்சாக சூழல்

பயிற்சி முகாமில் உற்சாக சூழல்

அணியின் தலைமை கோச் ரிக்கி பாண்டிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் தான் கடந்த வாரங்களில் உரையாடியதாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் திறமையான இளம் கேப்டன் என்றும் கூறியுள்ளார். இளம் வீரர்களுடன் அணியின் சூழல் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார். பயிற்சி முகாமிலும் உற்சாகமான சூழல் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து டெல்லி கேபிடல்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.

அஸ்வின் குறித்து ரிக்கி பாண்டிங்

அஸ்வின் குறித்து ரிக்கி பாண்டிங்

கடந்த 5 மாதங்களாக யாருடனும் சேராமல் வீட்டிலும் கடந்த ஒரு வாரமாக ஹோட்டலிலும் முடங்கியிருந்த நிலையில் பயிற்சி முகாம் மூலம் அனைவருடனும் உரையாடியது சிறப்பாக இருந்ததாகவும் அஸ்வின் கூறியுள்ளார். அஸ்வின் குறித்து அணியின் தலைமை கோச் ரிக்கி பாண்டிங், ஐபிஎல் வரலாற்றில் மிகவும் சிறப்பான ஸ்பின்னர்களில் ஒருவர் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பல விஷயங்களை முயற்சிக்கலாம்

பல விஷயங்களை முயற்சிக்கலாம்

தொடர்ந்து பேசிய அஸ்வின், ஐபிஎல் போட்டிகளின் மூலம் நம்முடைய திறமைகளை மேலும் பலப்படுத்திக் கொள்ளலாம் என்றும் புதிய விஷயங்களை முயற்சித்து பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் ஆய்வுக்கூடம் போன்றது என்றும் அதில் நமக்கு பிடித்தமான கிரிக்கெட்டில் பல விஷயங்களை நம்முடைய கற்பனை திறனுக்கேற்ப பயிற்சித்து பார்க்கலாம் என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 3, 2020, 10:56 [IST]
Other articles published on Sep 3, 2020
English summary
It's like a laboratory to try things out in the game -Ashwin
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X