கோபத்தில் விரலை காட்டிய ஹர்திக்.. வெற்றிக்கு பின் எகிறிய எம்ஐ.. மோதலுக்கு காரணமே வேறு.. பரபர பின்னணி

துபாய்: நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பலரும் பெங்களூர் அணி மீதும் கோலி மீதும் கோபமாக இருந்ததற்கு உண்மையான காரணம் என்ன என்று விவரம் வெளியாகி உள்ளது.

நேற்று மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது.ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை மிகவும் விறுவிறுப்பாக சென்றது.

ஒரு காலத்தில் மும்பை - சென்னை போட்டிகள் எப்படி நடைபெறுமோ அந்த அளவிற்கு நேற்று ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.

மோதல்

மோதல்

நேற்று போட்டி விறுவிறுப்பாக செல்ல காரணம் அதிக ஸ்கோரோ, அதிரடி சேசிங்கோ அல்ல. நேற்று தொடக்கத்தில் இருந்து இறுதி வரை மும்பை - பெங்களூர் வீரர்களுக்கு இடையே கடுமையான ஸ்லெட்ஜிங் நடந்ததுதான் காரணம். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே முதலில் பெங்களூர் வீரர்களை மும்பை வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்தனர்.

ஸ்லெட்ஜிங்

ஸ்லெட்ஜிங்

கோலி, ஏபிடி களத்தில் இருந்த போது பொல்லார்ட உள்ளிட்ட வீரர்கள் லேசான ஸ்லெட்ஜிங்கை தொடங்கினார்கள். ஆனால் அப்போதெல்லாம் பெரிய அளவில் மோதல் எதுவும் வரவில்லை. அதன்பின் மும்பை பேட்டிங்கின் போதுதான் ஸ்லெட்ஜிங் மோசமானது. அதாவது மும்பை பேட்ஸ்மேன்களை வரிசையாக கோலி சீண்டினார்.

சீண்டல்

சீண்டல்

மும்பையின் இஷான் கிஷான் விக்கெட் விழுந்த போதே கோலி ஆக்ரோஷமாக கத்தினார். அதேபோல் ஒவ்வொரு முறை சூர்ய குமார் யாதவ் அடிக்கும் பந்துகளை தடுத்துவிட்டு அவரை அடிப்பது போல பந்தை தூக்கி எறிந்தார். இரண்டு பேருமே களத்தில் பல முறை முறைத்துக் கொண்டது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. ஆனால் நேற்று இந்த சண்டை மட்டும் நடக்கவில்லை.

சண்டை

சண்டை

இன்னொரு பக்கம் ஹர்திக் பாண்டியா மற்றும் கிறிஸ் மோரிஸ் இடையிலும் சண்டை நடந்தது. கிறிஸ் மோரிஸ் போட்ட 19வது ஓவரில் பாண்டியா சிக்ஸ் அடித்துவிட்டு... அவரை நோக்கி விரலை காட்டினார். அதேபோல் அவரிடம் கோபமாக எதோ பேசினார். இதற்கு அடுத்த பந்தே ஹர்திக் பாண்டியா விக்கெட்டை எடுத்துவிட்டு மோரிஸ் கோபமாக பாண்டியவை திட்டினார். பெவிலியன் போங்க என்பது போல கத்தினார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

குர்னால், பொல்லார்டும் கோபமாக காணப்பட்டனர். நேற்று இப்படி போட்டி முழுக்க பல முறை சண்டை நடந்தது. மாற்றி மாற்றி வீரர்கள் மோதிக்கொண்டனர். இதற்கு காரணம், மும்பை அணி வீரர்கள் பலர் விரக்தியில் இருப்பதால்தான் என்கிறார்கள்.

முழு பின்னணி

முழு பின்னணி

மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்த முறை இஷான் கிஷான், ராகுல் சாகர், குர்ணால் பாண்டியா, ராகுல் சாகர், சூர்யா குமார் யாதவ் என்று வரிசையாக நிறைய வீரர்கள் நன்றாக ஆடி வருகிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோஹித்துக்கும் காயம் காரணமாக வாய்ப்பு இல்லை.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

இதனால் கோலி மீது தங்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தவே இப்படி மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். அணியில் வாய்ப்பு இல்லாத விரக்தியை வெற்றிக்கு பின்பும் மும்பை வீரர்கள் வெளிப்படுத்தினார்கள். அதை புரிந்து கொண்டதால்தான் கோலியும் பதிலுக்கு ஆக்ரோஷமாக செயல்பட்டார் என்கிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: Many Mumbai Indians players are not so happy with Kohli's Team India Selection
Story first published: Thursday, October 29, 2020, 15:41 [IST]
Other articles published on Oct 29, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X