வெளியான புகைப்படம்.. ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்ட "அழகு தாரகை" மாயந்தி லாங்கர்.. என்ன காரணம்?

அபுதாபி: ஐபிஎல் சீசன் 2020ல் இந்த முறை பிரபல தொகுப்பாளர் மாயந்தி லாங்கர் கலந்து கொள்ள மாட்டார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அந்த அழகு தாரகை அப்படியே பவுண்டரி லைன் பக்கம் நடந்து வந்தாலே, சிக்ஸ் போக வேண்டிய பந்து கூட திசை மாறி, அக்கா கால்ல வந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கும். சியர்ஸ் லீடர்களே பார்த்து பொறாமை கொள்ளும் அழகு, ஆண்களின் ஐபிஎல் கோட்டையில் இருக்கும் திறமை வாய்ந்த பெண் சிங்கம்.. மாயந்தி லாங்கர்.

பிரபல தொகுப்பாளர் மாயந்தி லாங்கர், களத்திற்கு வந்து தொகுத்து வழங்குவதை பார்க்கவே ஐபிஎல் கிரவுண்ட் கேலரியில் தனியாக கூட்டம் அள்ளும். அந்த அளவிற்கு ஐபிஎல் உலகில் தனக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்தான் மாயந்தி லாங்கர்.

2020 ஐபிஎல் அட்டவணை.. எந்த சானலில் பார்ப்பது? போனில் பார்க்க முடியுமா? முழு தகவல்கள்!

எப்படி வழங்குவார்

எப்படி வழங்குவார்

இவரின் அழகான தோற்றத்திற்கும், குரலுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அடிமை. ஆக்ரோஷமான மேட்சை பார்த்துவிட்டு அடுத்த நொடியே மாயந்தி லாங்கரை ஸ்கிரீனில் பார்த்தால் ''ஐஸ் கட்டியை தூக்கி அடுப்பு மீது வைத்தது'' போல மனசு லேசாகி அப்படியே உருகிவிடும். தன்னுடைய அழகு என்பதையும் தாண்டி இவர் குரல், தொகுத்து வழங்கும் ஸ்டைல் எல்லாம் இளைஞர்கள் மத்தியில் செம ரீச்.

நல்லவர்

நல்லவர்

அதிலும் இவர் தொகுத்து வழங்கும் ஸ்டைல் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் மிகவும் புரொஃபஷனலாக தனது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். அதோடு இன்னொரு பக்கம் பெரிய அளவில் யாரையும் சீண்டாமல், எல்லோரையும் பற்றி சமத்துவத்துடன் பேசுவார். சஞ்சய் மஞ்சிரேக்கர் போல தேவையில்லாமல் பேசி சர்ச்சையில் இவர் சிக்கியது இல்லை.

சர்ச்சை எப்படி

சர்ச்சை எப்படி

ஐபிஎல் மட்டுமின்றி பல்வேறு பிசிசிஐ போட்டிகள், உலகக் கோப்பை போட்டிகளையும் இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க இவருக்கு தனியாக ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் நெருங்கிய நண்பர். கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னி உடன் நட்பு நெருக்கம் ஆகி , அது காதலாக மாறி, கல்யாணத்தில் முடிந்தது வேறு கதை. எல்லோருக்கும் பிடித்த திறமையான தொகுப்பாளர் இவர்.

இந்த முறை

இந்த முறை

இந்த நிலையில் இந்த முறை ஐபிஎல் தொடரில் இவர் தொகுத்து வழங்க மாட்டார் என்று இரண்டு நாட்களாக செய்திகள் கசிந்தது. இவரை ஐபிஎல் நிர்வாகம் நீக்கிவிட்டது என்று செய்திகள் வெளியானது. இது மாயந்தி லாங்கர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மாயந்தி லாங்கர் தொகுத்து வழங்க மாட்டார் என்று ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாகவே உறுதி செய்துவிட்டது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

திடீர் என்று சிறந்த தொகுப்பாளர் ஒருவரை நீக்கியது ஏன்? ஐபிஎல் தொடரில் இவரை கலந்து கொண்டு தொகுத்து வழங்க அனுமதி அளிக்காதது ஏன் பலரும் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பின் பெரிய அரசியல் இருக்கலாம். இவரை நீக்கியதற்கு பின் யாராவது அழுத்தம் கொடுத்து இருக்கலாம். ஏதாவது அழுத்தம் காரணமாக அவர் நீக்கப்பட்டு இருக்கலாம் என்று நிறைய வதந்திகள் எழுந்த வண்ணம் இருந்தது.

உண்மை என்ன

உண்மை என்ன

இதற்கான உண்மை காரணம் தற்போது வெளியாகி உள்ளது. மாயந்தி இதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதன்படி மாயந்தி - பின்னி ஜோடிக்கு குழந்தை பிறந்துள்ளது. இவர்களின் ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், ஐபிஎல் தொடரில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை. மே மாதம் போட்டி நடந்து இருந்தால் கண்டிப்பாக தொடரில் கலந்து கொண்டு இருந்திருப்பேன் என்று மாயந்தி குறிப்பிட்டுள்ளார்.

ஒரே காரணம்

ஒரே காரணம்

தான் கர்ப்பமாக இருந்த போது முக்கியமான சில உதவிகளை ஐபிஎல் நிர்வாகம் செய்தது. இதற்கு மிக்க நன்றி. விரைவில் மீண்டும் தொகுப்பாளினியாக திரும்பி வருவேன் என்று இவர் கூறியுள்ளார். தான் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் மாயந்தி வெளியிட்டு இருக்கிறார். இதுதான் இவரின் நீக்கத்திற்கு காரணம். இந்த நிகழ்ச்சியில் எப்போதும் போல தமிழ் மொழி சார்பாக பிரபல தொகுப்பாளினி பாவனா தொகுத்து வழங்குவார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: Mayanti Langer won't be the part of commentary this year says IPL.
Story first published: Saturday, September 19, 2020, 11:54 [IST]
Other articles published on Sep 19, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X