For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீல்சேரில் கஷ்டப்பட்டார்.. பவுலிங் செய்ய விடவில்லை.. அவமானம்.. எழுந்து நின்று திருப்பி தந்த பாண்டியா

துபாய்: நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா செய்த பேட்டிங் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

2020 ஐபிஎல் தொடர் பல திருப்பங்களுடன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் சிஎஸ்கே போன்ற ஜாம்பவான் அணி வெற்றிபெற முடியாமல் பிளே ஆப் வாய்ப்பை இழக்கிறது.

இன்னொரு பக்கம் "கதை முடிந்துவிட்டது'' என்று நினைத்த பஞ்சாப் எழுந்து வந்து திமிறி எழுகிறது. நினைத்து பார்க்க முடியாத சுவாரசியங்களை இந்த ஐபிஎல் தொடர் அளித்துள்ளது. ராகுல் திவாதியா தொடங்கி நம்ம ஊர் பையன் நடராஜன் வரை இந்த ஐபிஎல் தொடர் பலருக்கும்.. மிக முக்கியமான தொடராக அமைந்து உள்ளது.

என்ன

என்ன

அதேபோல் இந்திய அணியின் முன்னணி வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கும் இது மிக முக்கியமான தொடர் ஆகும். உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய பாண்டியா, அதன்பின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாமல் கஷ்டப்பட்டார். இவர் காலில் காயம் பெரிதாக இருந்த காரணத்தால் மொத்தமாக பெட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது.

முடக்கம்

முடக்கம்

இவர் காலில் ஏற்பட்ட காயம் பெரிதான காரணத்தால் பெரிய ஆபரேஷன் செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த ஆபரேஷன் முடிந்த பின் இவரால் எழுந்து நடக்க கூட முடியவில்லை. காலை கீழே வைக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மருத்துவர்கள் இவரை வீல் சேர் பயன்படுத்தும்படி கூறினார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் இவர் வீல் சேரில்தான் இருந்தார்.

பிட்னஸ்

பிட்னஸ்

பிட்னஸை இழந்து, மிக மோசமாக கஷ்டப்பட்டார். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு வரை இவரால் சரியாக ஆட முடியவில்லை. இதன் காரணமாக அவர் பார்ம் இழந்து, என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தார். மும்பை அணிக்கு திரும்பிய பின்பும் கூட இவரால் அதிரடியாக ஆட முடியவில்லை. அணியின் கோச் ஜெயவர்தனே இவரை பவுலிங் போட விடவில்லை.

பவுலிங்

பவுலிங்

உங்களை வைத்து ரிஸ்க் எடுக்க முடியாது என்று கூறி உட்கார வைத்தார். இவரின் பேட்டிங்கும் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. பேட்டிங் சரியில்லை, பவுலிங் போட விடவில்லை என்று மும்பை அணிக்கு உள்ளேயே இவரின் இடம் கேள்விக்குறியாக தொடங்கியது. இந்திய அணியிலும் பாண்டியாவின் இடத்தை நிரப்ப நிறைய பேர் லைனில் நின்றனர்.

என்ன செய்தார்

என்ன செய்தார்

போட்டியின் போதே இணையத்தில் பலர் இவரை கடுமையாக கிண்டல் செய்து, அவமானப்படுத்தி உள்ளனர் .ஆனால் அனைத்து விமர்சனங்களுக்கும் நேற்று தனது பேட்டிங் மூலம் பாண்டியா பதிலடி கொடுத்தார்.நேற்று போட்டியில் பார்மிற்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா, அதிரடியாக ஆடி 21 பந்தில் 60 ரன்கள் எடுத்தார். இதில் 7 சிக்ஸ் , இரண்டு பவுண்டரி அடக்கம்.

தன்னுடைய ஸ்டைல்

தன்னுடைய ஸ்டைல்

தொடக்கத்தில் மெதுவாக ஆடி, கடைசியில் பாண்டியா அதிரடி காட்டினார்.இதுதான் அவரின் ஸ்டைல். முதல் 4-5 பந்துகளை கணித்துவிட்டு பின் வேகம் எடுப்பார். அந்த பாண்டியா தற்போது மீண்டு வந்து இருக்கிறார். மிக துல்லியமான கணிப்பு, அசால்ட் வேகம் என்று சிறப்பாக ஆடினார்.

சிக்ஸ்

சிக்ஸ்

அதிலும் இவர் அடித்த ஏழு சிக்ஸும் சரியான கணிக்கப்பட்டு, அடிக்கப்பட்ட ஒன்று. பேட்டை வெறுமனே சுற்றாமல் களத்தில் நேற்று பொறுப்பாக ஆடி ரன் குவித்தார் பாண்டியா.2021 உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யார் என்ற கேள்விக்கு பாண்டியா தற்போது கெத்தாக நான்தான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Monday, October 26, 2020, 10:33 [IST]
Other articles published on Oct 26, 2020
English summary
IPL 2020: MI Pandya proved himself as an all rounder in the match against RR.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X