For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடித்து நொறுக்கிய டி காக்.. மாஸ் காட்டிய ரோஹித் கேப்டன்சி..கொல்கத்தாவை தூசி தட்டி பறக்கவிட்டு மும்பை

துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை மாஸ் வெற்றிபெற்றுள்ளது. தொடக்கத்தில் இருந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்திய மும்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி அபுதாபியில் இன்று நடந்தது. இரண்டு அணிகளும் 7 போட்டியில் ஆடி உள்ள நிலையில் இன்று 8 வது போட்டியில் களமிறங்கியது.

மும்பை கிட்டத்தட்ட பிளே ஆப் செல்வது உறுதியாகிவிட்ட நிலையில் கொல்கத்தா அணி பிளே ஆப் செல்வதற்காக போராடியது. இன்று மும்பைக்கு எதிராக மேட்ச் நடக்கும் நிலையில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பதவி விலகி உள்ளார்.

மோர்கன்

மோர்கன்

இதனால் கொல்கத்தா கேப்டனாக இயான் மோர்கன் பதவி ஏற்றுள்ளார்.இயான் மோர்கன் கேப்டனாக பதவி ஏற்று முதல் போட்டியே வலுவான மும்பை அணியை எதிர்கொண்டார். மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா டாஸ் வென்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.

மோசம்

மோசம்

ஆனால் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் இருந்து சொதப்பியது. வரிசையாக கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர். ஓப்பனிங் இறங்கிய திரிப்பாதி 7 ரன்களுக்கும், சுப்மான் கில் 21 ரன்களுக்கும், நிதிஷ் ராணா 5 ரன்களுக்கும், தினேஷ் கார்த்திக் 4 ரன்களுக்கும், ரசல் வெறும் 12 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள்.

திணறல்

திணறல்

இதனால் கொல்கத்தா அணி 61 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து கடுமையாக திணறியது. இயான் மோர்கன், பேட் கும்மின்ஸ் மட்டும் களத்தில் இருந்தனர். 100 ரன்களுக்குள் கொல்கத்தா வீழ்ந்துவிடும் என்று கருதப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய கும்மின்ஸ் 36 பந்தில் 53 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி அடக்கம்.

இயான் மோர்கன்

இயான் மோர்கன்

இன்னொரு பக்கம் இயான் மோர்கன் 29 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். இதனால் சரிவில் இருந்து மீண்ட கொல்கத்தா 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய மும்பை தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. முதல் 10 ஓவர்களில் ரோஹித் - டீ காக் விக்கெட்டையே எடுக்க முடியாமல் கொல்கத்தா அணி திணறியது.

திணறல்

திணறல்

முதல் பந்து ஓவரிலேயே மும்பை இதனால் எளிதாக 90 ரன்களை கடந்தது. நிதானமாக ஆடிய ரோஹித் 36 பந்தில் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின் இறங்கிய சூர்யா குமார் யாதவ் 10 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் டீ காக் 44 பந்தில் 78 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார் . இதனால் மும்பை எளிதாக 16.5 ஓவரில் 149 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இயான் மோர்கன் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே கொல்கத்தா அணி தோல்வி அடைந்துள்ளது.

Story first published: Friday, October 16, 2020, 22:51 [IST]
Other articles published on Oct 16, 2020
English summary
IPL 2020: MI team complete performance wins the Kolkata team easily in Abu Dabhi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X