நீங்க ஓடி வர மாட்டீங்களா? எகிறிய ஆஸி. வீரர்.. முகத்தை திருப்பிக் கொண்ட தவான்.. பரபர சம்பவம்!

அபுதாபி : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் ஷிகர் தவான் - மார்கஸ் ஸ்டோய்னிஸ் இடையே உரசல் ஏற்பட்டது.

இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. ஷிகர் தவான் அரைசதம் அடித்து 69 ரன்கள் குவித்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாகவே இருந்தது.

இடையே அதிரடி ஆட்டம் ஆட வந்த ஸ்டோய்னிஸ்-ஐ ரன் ஊட அழைத்து விட்டு பின் ஓடாமல் அவர் ரன் அவுட் ஆக காரணமாக இருந்தார். ஸ்டோய்னிஸ் அவரிடம் கோபமாக கத்திய படி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நண்பன் ரோஹித் டீம் ஜெயிக்க உதவிய தவான்.. டி காக், சூர்யகுமார் அரைசதம்... மும்பை அபார வெற்றி!

டெல்லி பேட்டிங்

டெல்லி பேட்டிங்

இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஷிகர் தவான் மட்டுமே நிலையாக ஆட மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தனர். ப்ரித்வி ஷா 4, ரஹானே 15, ஸ்ரேயாஸ் ஐயர் 42 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தவான் ஆட்டம்

தவான் ஆட்டம்

தவான் 120 முதல் 130 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் எடுத்து வந்தார். அதை அவரால் தாண்ட முடியவில்லை. அவர் நிதானமாக ஆடியதால் அதிரடி வீரர்கள் அவருடன் ஆடினால் மட்டுமே டெல்லி அணி பெரிய அளவில் ரன் குவிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

அடித்து ஆட திட்டம்

அடித்து ஆட திட்டம்

அப்போது டெல்லி அணி வேகமாக ரன் குவிக்க மார்கஸ் ஸ்டோய்னிஸ்-ஐ அனுப்பி வைத்தது. அவர் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து இருந்தார். 17வது ஓவரில் பேட்டிங் செய்து வந்தார். ராகுல் சாஹர் வீசிய அந்த ஓவரின் மூன்றாவது பந்தை ஸ்டோய்னிஸ் சூர்யகுமார் யாதவ் பீல்டிங் செய்யும் திசையில் அடித்தார்.

தடுமாறினார்

தடுமாறினார்

அப்போது தவான் - மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு ரன் ஓடினர். சூர்யகுமார் யாதவ் பந்தை சரியாக பிடிக்கவில்லை. சில வினாடிகள் பந்தை கைகளில் பிடிக்க தடுமாறினார். அந்த இடைவெளியில் தவான், மார்கஸ் ஸ்டோய்னிஸ்-ஐ இரண்டாவது ரன் ஓட அழைத்தார்.

ஸ்டோய்னிஸ் ரன் அவுட்

ஸ்டோய்னிஸ் ரன் அவுட்

ஆனால், பந்து சூர்யகுமார் கைகளில் இருப்பதை கண்ட தவான் பின் வாங்கினார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் வேகமாக நான்கு அடி எடுத்து வைத்து, தவான் விலகுவதை பார்த்து தன் கிரீஸுக்கு ஓட முயன்றார். ஆனால், அதற்குள் ரன் அவுட் ஆனார்.

கோபத்தில் கத்தினார்

கோபத்தில் கத்தினார்

இதையடுத்து தான் அவுட் ஆக தவான் ரன் ஓட அழைத்தது தான் காரணம் எனக் கூறி கோபத்தில் கத்தினார் மார்கஸ் ஸ்டோய்னிஸ். பெவிலியன் திரும்பும் வரை தவானை பற்றி கத்திக் கொண்டே சென்றார். தவான் இதை கண்டும் காணாமல் முகத்தை திருப்பி வைத்துக் கொண்டார்.

டெல்லி ஸ்கோர்

டெல்லி ஸ்கோர்

அதன் பின் தவான் பெரிதாக ரன் குவிக்கவில்லை. டெல்லி கேபிடல்ஸ் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. தவான் 20 ஓவர்களும் நின்று ஆடி 52 பந்துகளில் 69 ரன்கள் மட்டுமே எடுத்தார். மும்பை அணிக்கு இது எளிதான ஸ்கோராக அமைந்தது.

மும்பை வெற்றி

மும்பை வெற்றி

அடுத்து ஆடிய மும்பை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. டெல்லி அணி பேட்டிங்கில் 180 ரன்களுக்கும் மேல் எடுத்து இருந்தால் மும்பை அணியை வீழ்த்தி இருக்க முடியும். தவான் ஆட்டத்தால் அந்த அணி தோல்வி அடைந்தது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL News : MI vs DC : Marcus Stoinis unhappy with Shikar Dhawan, after he refused to run, which causes his run out.
Story first published: Monday, October 12, 2020, 1:14 [IST]
Other articles published on Oct 12, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X