For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

0-க்கு 3 விக்கெட்.. கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லை.. டெல்லி அணியை கதற வைத்த மும்பை ஜோடி!

துபாய் : டெல்லி கேபிடல்ஸ் அணி மீது ஆதிக்கம் செலுத்தி அந்த அணிக்கு மரண அடி கொடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

பும்ரா, ட்ரென்ட் போல்ட் வேகத்தில் சிக்கி சின்னாபின்னமானது டெல்லி கேபிடல்ஸ். இதுவரை இல்லாத அளவுக்கு டெல்லி அணியை துவம்சம் செய்தது இந்த ஜோடி.

டெல்லி அணி ரன்னே எடுக்காமல் 3 விக்கெட்களை இழந்து பரிதாபமாக காட்சி அளித்தது.

போட்டி போட்டு சிக்ஸ் அடித்த பாண்டியா - இஷான்.. அந்த 2 வீரர்களை குறி வைத்த மும்பை.. கதிகலங்கிய டெல்லிபோட்டி போட்டு சிக்ஸ் அடித்த பாண்டியா - இஷான்.. அந்த 2 வீரர்களை குறி வைத்த மும்பை.. கதிகலங்கிய டெல்லி

டாஸில் தோல்வி

டாஸில் தோல்வி

2020 ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச் சுற்றுப் போட்டி என்பதால் இரு அணிகளும் திட்டங்களுடன் களமிறங்கின. மும்பை அணியில் பும்ரா, ட்ரென்ட் போல்ட் மீண்டும் அணிக்கு திரும்பினர். டாஸில் மும்பை அணி தோல்வி அடைந்து முதலில் பேட்டிங் செய்தது.

மும்பை பேட்டிங்

மும்பை பேட்டிங்

போட்டி நடந்த துபாய் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்பதால் இது மும்பை அணிக்கு பின்னடைவாக இருந்தது. ரோஹித் சர்மா, கீரான் பொல்லார்டு உள்ளிட்ட முக்கிய வீரர்கள் டக் அவுட் ஆனார்கள்.

200 ரன்கள்

200 ரன்கள்

ஆனாலும், இலாம் வீரர்கள் பொறுப்பாக ஆடினார்கள். இஷான் கிஷன் 55*, சூர்யகுமார் யாதவ் 51, டி காக் 40 ரன்கள் எடுத்தனர். ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் ஆடி 14 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் சேர்த்தது.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி சேஸிங் செய்யத் துவங்கியது. அந்த அணிக்கு ப்ரித்வி ஷா - ஷிகர் தவான் துவக்கம் அளிக்க வந்தனர். ட்ரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் ப்ரித்வி ஷா, அஜின்க்யா ரஹானே டக் அவுட் ஆனார்கள். அடுத்து பும்ரா வீசிய ஓவரில் ஷிகர் தவான் டக் அவுட் ஆனார்.

பும்ரா, போல்ட்

பும்ரா, போல்ட்

முதல் மூன்று பேட்ஸ்மேன்களை முதல் இரண்டு ஓவர்களில் டக் அவுட் ஆக்கி மிரள வைத்தது ட்ரென்ட் போல்ட் - பும்ரா ஜோடி. இவர்கள் ஆதிக்கத்தால் டெல்லி அணி மிரண்டு போனது. இப்படி ஒரு மோசமான துவக்கத்தை இந்தா ஐபிஎல் தொடரில் எந்த அணியும் பெறவில்லை.

பெரும் ஆதிக்கம்

பெரும் ஆதிக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணி டாஸில் தோல்வி அடைந்து, முதலில் பேட்டிங் செய்தால் ரன் குவிக்க முடியாத களத்தில் 200 ரன்கள் குவித்தது. அத்துடன் இரண்டாவதாக பந்து வீசி ரன்னே கொடுக்காமல் 3 விக்கெட் வீழ்த்தி பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியது.

டெல்லி நிலை

டெல்லி நிலை

டெல்லி கேபிடல்ஸ் அணி அதன் பின்னும் விக்கெட்களை இழந்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 12 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 3 ரன்களில் க்ருனால் பாண்டியாவிடம் வீழ்ந்தார். ஸ்டோய்னிஸ் மட்டுமே அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார்.

Story first published: Thursday, November 5, 2020, 22:43 [IST]
Other articles published on Nov 5, 2020
English summary
IPL 2020 MI vs DC qualifier 1 : Bumrah, Boult took 3 wickets for 0 runs. This is absolute domination from Mumbai Indians.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X