For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ!

மும்பை : இந்திய ஒருநாள் அணியில் இருந்து தோனி ஓய்வு பெற்று சில வாரங்கள்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் இந்திய அணியில் பெரிய அளவில் குழப்பங்கள் ஏற்பட தொடங்கி உள்ளது.

இந்திய அணியின் இரண்டு பெரிய மூத்த வீரர்கள் கோலி மற்றும் ரோஹித். இவர்கள் இருவரும் இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன்களாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கடந்த ஒன்றரை வருடமாக தகவல்கள் வருகிறது. அணிக்குள் யார் ஆதிக்கம் செலுத்துவது என்று கோலி, ரோஹித் இடையே உரசல் நிலவி வருகிறது என்கிறார்கள்.

உரசல்

உரசல்

இந்த உரசல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சமயத்தில் விஸ்வரூபம் எடுத்தது. அப்போது இந்திய அணியில் கோலியின் கேப்டன்சி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. கோலி சரியாக கேப்டன்சி செய்யவில்லை. சரியான அணியை எடுக்கவில்லை.இதனால்தான் இந்திய அணி தோல்வி அடைந்தது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

எப்படி

எப்படி

அப்போதே இந்திய அணியில் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடையே பெரிய விரிசல் ஏற்பட்டது. இந்திய அணிக்கு உள்ளேயே கோலியின் ஆதரவு குழு, ரோஹித்தின் ஆதரவு குழு என்று இரண்டு குழு இருந்தது. கோலிக்கு ஆதரவாக பெங்களூர் அணி வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்பட்டனர். அதேபோல் ரோஹித்திற்கு ஆதரவாக மும்பை வீரர்கள் இருந்தனர்.

மும்பை

மும்பை

இந்திய அணியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் ஆதிக்கம்தான் தொடக்கத்தில் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அதன்பின் அணியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த கோலி தென்னிந்தியர்கள், டெல்லி கிரிக்கெட் வீரர்கள் என்று சமமாக பலருக்கு வாய்ப்பு கொடுத்து மும்பை ராஜ்ஜியத்தை காலி செய்தார். அப்போதில் இருந்தே கோலி ரோஹித் மோதல்.. மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் முக்கிய விஷயமாக இருந்தது.

முக்கிய விஷயம்

முக்கிய விஷயம்

இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக இந்த மோதல் இன்னும் மோசமாக மாறியுள்ளது. இந்திய அணியில் காயத்தை காரணம் காட்டி ரோஹித் சர்மா நீக்கப்பட்டு உள்ளார். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, பாண்டியா தவிர யாரும் எடுக்கப்படவில்லை. சூர்யா குமார் யாதாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மோதல் கடுமை

மோதல் கடுமை

நேற்று நடந்த போட்டியிலும் இரண்டு அணி வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர். பாண்டியா - மோரிஸ் சண்டை, கோலி - சூர்யா குமார் சண்டை என்று நிறைய மோதல்கள் நேற்று வெளிப்படையாக நடந்தது. இதனால் கோலி vs ரோஹித் சண்டை இந்திய அணியில் மொத்தமாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது. அணியில் தோனி இருந்தவரை இவர்களுக்கு இடையே ஒரு பாலமாக இருந்தார்.

பிரச்சனை இல்லை

பிரச்சனை இல்லை

தோனி இருந்தவரை இரண்டு வீரர்களும் புறக்கணிக்கப்படவில்லை. அணிக்குள் ஒரு ஒற்றுமை இருந்தது. தற்போது தோனியும் வெளியேறி விட்டார். இதனால் மொத்தமாக அணியில் இனி என்ன நடக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. இரண்டு பேருக்கும் இடையில் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் குறித்து பிசிசிஐ அமைப்பும் வாயை திறக்காமல் மௌனம் சாதித்து வருகிறது.

Story first published: Thursday, October 29, 2020, 14:41 [IST]
Other articles published on Oct 29, 2020
English summary
IPL 2020: MI vs RCB match shows that all is not well with Rohit Sharma and Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X