கண்டுக்கவே இல்லை.. ஒவ்வொரு மேட்சிலும் கோலிக்காக பாடுபட்டதெல்லாம் வீண்.. உறைந்து போன இளம் வீரர்

துபாய்: இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்ட தேவ்தத் படிக்கலுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

2020 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. பிளே ஆப் செல்ல வாய்ப்பு உள்ள அணியாகவும், கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ள அணியாகவும் பெங்களூர் அணி பார்க்கப்படுகிறது.

பெங்களூர் அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் இந்த முறை சிறப்பாக மாறியுள்ளது. இத்தனை சீசன்களாக சொதப்பிய பெங்களூர் அணியின் பவுலிங் இந்த சீசனில் பெரிய அளவில் மாற்றம் அடைந்துள்ளது.

பேட்டிங்

பேட்டிங்

அதேபோல் பேட்டிங் ஆர்டரும் படிக்கல் வருகையால் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெங்களூர் அணியில் இத்தனை வருடங்களாக பர்தீவ் பட்டேல் ஓப்பனிங் இறங்கி வந்தார். ஆனால் அவரின் மோசமான பேட்டிங் காரணமாக ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் மோசமாக சொதப்பியது.

மாற்றம்

மாற்றம்

இதனால் பெங்களூர் அணியின் டாப் ஆர்டர் இந்த முறை மொத்தமாக மாற்றப்பட்டது. அணியில் பர்தீவ் பட்டேலுக்கு மாற்றாக ஆரோன் பின்ச் களமிறக்கப்பட்டார். அதேபோல் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். பெங்களூர் அணிக்குள் படிக்கல் வந்த பின் அணியின் பேட்டிங் ஆர்டர் மொத்தமாக புதிய வலிமை பெற்றது.

எப்படி

எப்படி

இந்த சீசன் முழுக்க தொடர்ந்து நன்றாக ஆடிய ஒரே இளம் வீரர் படிக்கல் மட்டுமே. சஞ்சு சாம்சன், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் என்று எந்த வீரரும் எல்லா போட்டியிலும் சிறப்பாக ஆடவில்லை. ஆனால் படிக்கல் மட்டுமே தான் ஆடிய அனைத்து போட்டியிலும் பெங்களூர் அணிக்காக ரன்களை குவித்தார். இந்திய அணியில் இடம்பெறாத வீரர்களில் அதிக ரன் குவித்த வீரர்களில் படிக்கல் முன்னணி இடத்தில் உள்ளார்.

உச்சம்

உச்சம்

இவரின் விக்கெட்டை எடுக்க உலகின் தலை சிறந்த பவுலர்கள் கூட இந்த சீசனில் மோசமாக திணறினார்கள். கோலியின் ஐபிஎல் கோப்பை கனவை இந்த முறை படிக்கல் நிறைவேற்றித் தருவார் என்றுதான் பலரும் கணித்துள்ளனர். ஆனால் இவ்வளவு திறமையான படிக்கலுக்கு இந்திய டி 20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியா செல்லும் இந்திய டி 20 அணியில் இவர் பெயர் இல்லை.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இந்திய அணியில் மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன் ஆகியோர் உள்ளனர். சஞ்சு சாம்சன் சில போட்டிகளில் நன்றாக ஆடினாலும் மற்ற போட்டிகளில் எல்லாம் சொதப்பினார். ஆனால் படிக்கல் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வருகிறார். ஆனாலும் படிக்கலுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கோலியை நம்பி அவருடன் ஆடி வரும் படிக்கல் இதனால் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளார்.

விரைவில்

விரைவில்

இன்னொரு பக்கம் இவருக்கு விரைவில்.. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். இந்த பட்டியல் ஐபிஎல் ஆட்டத்தை வைத்து எடுக்கப்படவில்லை. டொமஸ்டிக் ஆட்டத்தை வைத்தும்தான் வீரர்களை தேர்வு செய்துள்ளனர். அதனால் படிக்கல் விரைவில் இந்திய அணிக்குள் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: New talent Devdutt Padikkal not to be the part of Team T20 India for Aussie tour.
Story first published: Tuesday, October 27, 2020, 14:12 [IST]
Other articles published on Oct 27, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X