For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த வீடியோவில் உண்மை இல்லை.. ரோஹித் சர்மாவின் நெட் பயிற்சி.. பிசிசிஐ பகிரங்க குற்றச்சாட்டு.. போச்சு

துபாய்: மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நெட் பயிற்சி வீடியோவில் உண்மை இருப்பதாக தோன்றவில்லை என்று பிசிசிஐ நிர்வாகி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருக்கும் இந்திய அணியில் இருந்து மூத்த வீரர் ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ளனர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் ரோஹித் சர்மா எடுக்கப்படாதது பெரிய அளவில் சர்ச்சை ஆகியுள்ளது. கோலி செய்த அரசியல் காரணமாகவே ரோஹித் சர்மா அணியில் எடுக்கப்படவில்லை என்று புகார்கள் வைக்கப்படுகிறது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் நேற்று முதல்நாள் இந்திய அணி அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் ரோஹித் சர்மா வலை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டது. ரோஹித்திற்கு காயம் இல்லை. அவர் நன்றாகத்தான் இருக்கிறார் என்பதை உணர்த்துவது போல மும்பை அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டு இருந்தது.

உண்மை

உண்மை

இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் அந்த வீடியோவில் உண்மை இருப்பதாக தோன்றவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐ ஊழியர் ஒருவர் ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ரோஹித் சர்மா நெட் பயிற்சி செய்வது உண்மை என்று கூற முடியாது. அவரின் காயத்தை வைத்து பார்க்கும் போது இது உண்மை என்று சொல்ல முடியாது.

மோசம்

மோசம்

ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்டு இருக்கும் காயம் நினைத்து பார்ப்பதை விட மோசமாக இருக்கிறது. நாம் நினைத்ததை விட அவரின் காயம் மோசமாக இருக்கிறது. முதலில் இருந்த காயத்தை விட இப்போது காயம் மோசமாக உள்ளது.

உண்மை இல்லை

உண்மை இல்லை

அவரின் காயத்தை வைத்து பார்த்தால் அந்த வீடியோவை உண்மையின் பிரதிபலிப்பு என்று கூற முடியாது. ஒரு வீரருக்கு கிரேட் 1 காயம் ஏற்பட்டால் அவர் 4-6 வாரம் ஓய்வு எடுக்க வேண்டும். கிரேட் 2 காயம் ஏற்பட்டால் 8 வாரம் வரை ஓய்வு எடுக்க வேண்டும்.

எப்போது வருவார்

எப்போது வருவார்

சின்ன அளவில் காயம் இருந்தால் கூட அவர் 10 நாள் ஓய்வு எடுத்து, அதன்பின்தான் மீண்டும் களமிறங்க முடியும். ரோஹித் சர்மா எப்போது மீண்டும் களத்திற்கு வருவார் என்பதை காலம்தான் முடிவு செய்யும் என்று அந்த பிசிசிஐ ஊழியர் தெரிவித்துள்ளார். இதனால் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் ஆட வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, October 28, 2020, 20:41 [IST]
Other articles published on Oct 28, 2020
English summary
IPL 2020: Not a reflection of truth says BCCI source on Rohit Sharma training video
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X