For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின், கோலி தவிர வேறு எந்த இந்திய வீரரும் செய்யாத ஐபிஎல் சாதனை.. ஏபிடியின் தொட முடியாத ரெக்கார்டு!

மும்பை : 2020 ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி அன்று துவங்க உள்ளது.

Recommended Video

IPL 2020 : UAE planning to allow fans inside stadium

இது 13வது சீசன் ஐபிஎல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் 12 சீசன்களில் வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

அதில் சச்சின், கோலி, ஏபி டிவில்லியர்ஸ், குமார் சங்ககாரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின் சில சாதனைகள் வியக்க வைப்பதாக உள்ளது.

பெரிய ரிஸ்க்.. ஐபிஎல் தொடரை வைத்து காசு பார்க்கத் தயார் ஆகும் நாடு.. சிக்கலில் பிசிசிஐ!பெரிய ரிஸ்க்.. ஐபிஎல் தொடரை வைத்து காசு பார்க்கத் தயார் ஆகும் நாடு.. சிக்கலில் பிசிசிஐ!

சச்சின் எந்த ஆண்டில் வென்றார்?

சச்சின் எந்த ஆண்டில் வென்றார்?

2010ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி அதிக ரன்கள் குவித்தார். அந்த ஆண்டு மட்டும் அவர் 618 ரன்கள் குவித்தார். அதன் அடிப்படையில் அந்த ஆண்டின் அதிக மதிப்புமிக்க வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

சச்சின், கோலி

சச்சின், கோலி

அதிக மதிப்புமிக்க ஐபிஎல் வீரர் என்ற பட்டம் வீரர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில் வழங்கப்படும். இந்த பட்டத்தை வென்ற இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி மட்டுமே.

சச்சின் எந்த ஆண்டில் வென்றார்?

சச்சின் எந்த ஆண்டில் வென்றார்?

2010ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி அதிக ரன்கள் குவித்தார். அந்த ஆண்டு மட்டும் அவர் 618 ரன்கள் குவித்தார். அதன் அடிப்படையில் அந்த ஆண்டின் அதிக மதிப்புமிக்க வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

கோலி அதிரடி

கோலி அதிரடி

2016ஆம் ஆண்டு விராட் கோலி தன் உச்சகட்ட பார்மில் இருந்தார். பெங்களூர் அணிக்காக ரன் மழை பொழிந்தார். அந்த ஒரு சீசனில் மட்டும் 973 ரன்கள் குவித்து அதிக மதிப்புமிக்க வீரர் என்ற பட்டத்தை வென்றார். அதன் பின் எந்த இந்திய வீரரும் அந்த பட்டத்தை பெறவில்லை.

மூன்று வெளிநாட்டு வீரர்கள்

மூன்று வெளிநாட்டு வீரர்கள்

மேலும், அந்தப் பட்டத்தை மூன்று வெளிநாட்டு வீரர்கள் இரண்டு முறை வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷேன் வாட்சன், ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் சுனில் நரைன் தான் அந்த மூன்று வீரர்கள். இவர்கள் ஒரே அணிக்கு ஆடும் போதே இரண்டு முறை அதிக மதிப்புமிக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்போது வென்றனர்?

எப்போது வென்றனர்?

ஷேன் வாட்சன் 2008 மற்றும் 2013ஆம் சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆடும் போதும், ஆண்ட்ரே ரஸ்ஸல் 2015, 2019இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடும் போதும், சுனில் நரைன் 2012 மற்றும் 2018இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடும் போதும் அதிக மதிப்புமிக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

கோலி பார்ட்னர்ஷிப்

கோலி பார்ட்னர்ஷிப்

ஐபிஎல் தொடரில் மூன்று முறை 200 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த ஒரே பேட்ஸ்மேன் விராட் கோலி தான். 2012இல் கிறிஸ் கெயிலுடன் இணைந்து 204 ரன்கள் கூட்டணி அமைத்தார். 2015 மற்றும் 2016இல் ஏபி டிவில்லியர்ஸ் உடன் இணைந்து 215 மற்றும் 229 ரன்களுக்கு கூட்டணி அமைத்தார் கோலி.

டிவில்லியர்ஸ் சாதனை

டிவில்லியர்ஸ் சாதனை

விக்கெட் கீப்பராக ஏபி டிவில்லியர்ஸ் அபார சாதனை ஒன்றை செய்துள்ளார். 2016 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிய அவர் விக்கெட் கீப்பராக 19 கேட்ச்கள் பிடித்தார். அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.

குமார் சங்ககாரா

குமார் சங்ககாரா

குமார் சங்ககாரா டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடும் போது ஒரே போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியும், அந்த விக்கெட் கீப்பிங் சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை.

Story first published: Saturday, August 1, 2020, 18:20 [IST]
Other articles published on Aug 1, 2020
English summary
IPL 2020 : Only Sachin Tendulkar and Virat Kohli hold MVP awards among Indian players, while three foreigners held this for two seasons.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X