For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா?

துபாய்: இந்திய அணியில் இளம் வீரர் ரிஷாப் பண்ட் சேர்க்கப்படாததற்கு காரணம் என்ன என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

டிசம்பர் மாதம் நடக்க உள்ள ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நேற்று இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கிரிக்கெட் உலகம் பரபரப்பாக உள்ளது. இந்திய அணியில் இந்த முறை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இளம் வீரர்கள் பலருக்கு விராட் கோலி வாய்ப்பு கொடுத்துள்ளார். அணி மொத்தமாக புதுப்பொலிவை பெற்றுள்ளது.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சில ஷாக்கிங் விஷயங்கள், எதிர்பாராத விஷயங்கள் உள்ளது. அதன்படி அணியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. வருண் சக்ரவர்த்தி போன்ற பெரிய அனுபவம் இல்லாத வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் காயம் காரணமாக புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா இடம்பெறவில்லை.

அணியில் இல்லை

அணியில் இல்லை

தற்போது அணியில் இடம்பெறாமல் போன ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா இரண்டு பேருமே காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் முழு பிட்னஸ் அறிக்கை வெளியான பின் அணியில் சேர்க்கலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

பண்ட்

பண்ட்

அதேபோல் ஒருநாள் மற்றும் டி 20 அணியில் இருந்து பண்ட் நீக்கப்பட்டுள்ளார். மாறாக டெஸ்ட் அணியில் இவர் இடம்பெற்றுள்ளார். ஆனால் டெஸ்ட் அணியில் பண்ட் கீப்பராக ஆட மாட்டார், சாகா கீப்பிங் செய்வார், பண்ட் பெஞ்சில் இருக்கவே வாய்ப்புள்ளது என்கிறார்கள். பண்ட் அணியில் சேர்க்கப்படாமல் போனதற்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது.

பார்மில் இருக்கிறார்

பார்மில் இருக்கிறார்

பண்ட் நல்ல பார்மில்தான் இருக்கிறார. ராகுல் இடத்தில் முதலில் இவரை எடுக்கவே ஆலோசனை செய்துள்ளனர். ஆனால் இவரின் எடை பிசிசிஐ அனுமதித்த எடையை விட அதிகமாக உள்ளது. இவரின் உயரத்திற்கு தகுந்த எடையை விட இவர் அதிகமாக காணப்படுகிறார். இதனால் இவரால் வேகமாக ஓட முடியவில்லை.

எடை குறைப்பு

எடை குறைப்பு

இவர் எடையை குறைக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இவரின் எடை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்துள்ளது. இவர் இருக்க வேண்டிய எடையை விட சில கிலோக்கள் கூடுதலாக இருப்பதாக கூறப்படுகிறது.

கூடுதல்

கூடுதல்

இதன் காரணமாக தற்போது ஒருநாள் மற்றும் டி 20 அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எடையை குறைத்தால் இவரை பரிசீலனை செய்ய பிசிசிஐ முடிவு செய்யும் என்கிறார்கள். ஆனால் இவர் பல மாதமாக முயன்று எடை குறையவில்லை என்கிறார்கள்.

Story first published: Tuesday, October 27, 2020, 16:31 [IST]
Other articles published on Oct 27, 2020
English summary
IPL 2020: Overweight Rishabh Pant not selected in ODI and T20 Team India for the Aussie
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X