For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர்கள்தான் எதிர்காலம்.. ரொம்ப நம்பினோம்.. மும்பையை புரட்டி போட்ட "ஆபரேஷன்".. ரோஹித் அதிர்ச்சி!

மும்பை: மும்பை அணியில் முக்கிய வீரர்கள் இருவருக்கு உடலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் காயம் காரணமாக, அவர்களின் பார்ம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி காரணமாக மும்பை அணி தன்னை சுய பரிசோதனை செய்ய தொடங்கி உள்ளது.

எந்த இடத்தில் மும்பை அணி சறுக்கியது, சென்னை போன்ற அணியிடம் மும்பை தோல்வி அடைந்தது எப்படி என்று அந்த அணி சுயபரிசோதனை செய்ய தொடங்கி உள்ளது. இதில்தான் மும்பை அணியின் தோல்விக்கு முக்கியமான இரண்டு வீரர்கள் காரணமாக பார்க்கப்படுகிறார்கள்.

மும்பை மும்பை வீரர்

மும்பை மும்பை வீரர்

மும்பை வீரர் பாண்டியாவின் பார்ம் அவுட் அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் ஆகும். நேற்று நடந்த போட்டியில் அவர் 10 பந்துகளுக்கு 14 ரன்கள் எடுத்தார். முதலில் அதிரடியாக ஆடினாலும், தேவையில்லாமல் பந்துகளை சுற்றி அவுட்டானார். அதேபோல் அவரின் பேட்டிங் ஸ்டைலும் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை.

சுற்றினார் தேவையில்லாமல் சுற்றினார்

சுற்றினார் தேவையில்லாமல் சுற்றினார்

தேவையில்லாமல் அவர் பேட்டை போட்டு சுற்றினார் என்றும் புகார் வைக்கப்பட்டது. அவர் கொஞ்சம் பொறுப்பாக ஆடி இருந்தால், மும்பை கொஞ்சம் கூடுதல் ரன்களை எடுத்து இருக்கும். இதற்கு இவரின் பார்ம் அவுட்தான் காரணம் என்கிறார்கள். இவரின் பார்ம் அவுட்டிற்கு காரணம், இவர் உடலில் செய்யயப்பட்ட ஆபரேஷன்கள். கடந்த நவம்பர் மாதம் இவருக்கு லண்டனில் ஆபரேஷன் செய்யப்பட்டது. முதுகில் இந்த ஆபரேஷன் செய்யப்பட்டது.

பார்ம் பார்ம் அவுட்

பார்ம் பார்ம் அவுட்

முதுகில் சதையில் ஏற்பட்டு இருந்து பாதிப்பு காரணமாக இவருக்கு இந்த ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆபரேஷன் செய்யப்பட பின் இவரால் இரண்டு வாரம் நடக்க கூட முடியவில்லை. வீல் சேரில் அமர்ந்துதான் இவர் சில நாட்கள் காலத்தை கழித்தார். அதன்பின் இவர் ஸ்டிக் பயன்படுத்தி நடந்தார். இதனால்தான் நேற்று இவருக்கு பவுலிங்கும் தரப்படவில்லை.

பங்கு பங்கு இல்லை

பங்கு பங்கு இல்லை

இவர் பயிற்சியின் போது சரியாக பந்து வீசவில்லை என்று புகார் உள்ளது. இன்னோர் பக்கம் உலகின் முன்னணி பவுலர் பும்ராவும் நேற்று சரியாக பந்து வீசவில்லை. நேற்று 4 ஓவர்கள் வீசிய பும்ரா 43 ரன்களை கொடுத்தார். வெறும் 1 விக்கெட்தான் எடுத்தார். அவரின் ஓவர் முன்பு போல மிகவும் சிறப்பாக இல்லை. அதேபோல் அவரின் யார்க்கரும் அடிக்கும் அளவிற்குதான் இருந்தது.

மோசம் ஏன் இப்படி

மோசம் ஏன் இப்படி

இவரின் உடலில் ஏற்பட்ட காயங்களும் இதற்கு காரணம் . இதற்கு இவர் நேரடியாக சர்ஜரி செய்யவில்லை . ஆனாலும் இவர் காயம் காரணமாக சில மாதங்கள் பயிற்சி எடுக்காமல் அவதிப்பட்டார். இதனால் பார்மை இழந்த பும்ரா, தற்போது தொடரில் சரியாக பந்து வீசாமல் சொதப்ப தொடங்கி உள்ளார். மும்பை அணி மலை போல நம்பிய இரண்டு வீரர்கள் ரோஹித்துக்கும் மும்பை அணிக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Story first published: Sunday, September 20, 2020, 18:35 [IST]
Other articles published on Sep 20, 2020
English summary
IPL 2020: Pandya and Bumrah performance raises questions against Chennai Super Kings
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X