For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவருக்கு இழைக்கப்பட்டது அநீதி.. ராயுடுவிற்காக களமிறங்கிய முன்னாள் வீரர்கள்.. பிசிசிஐக்கு நெருக்கடி!

சென்னை: மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் அதிரடியாக ஆடியதன் மூலம் சென்னை வீரர் அம்பதி ராயுடுவிற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வெற்றியோடு தனது ஐபிஎல் சீசனை தொடங்கி உள்ளது. முதல் ஐபிஎல் போட்டியே சென்னைக்கும் மும்பைக்கும் இடையில் நடந்தது.

இதில் அதிரடியாக ஆடிய சென்னை, மும்பையை வென்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை சென்னைக்கு எதிராக 162 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் அதன்பின் அதிரடியாக ஆடிய சென்னை அணி 165 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

அம்பதி ராயுடு

அம்பதி ராயுடு

இந்த போட்டியில் சென்னை அணிக்காக 4வது இடத்தில் இறங்கி ஆடிய அம்பதி ராயுடு 48 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் அடக்கம். தொடக்கத்தில் வரிசையாக இரண்டு விக்கெட் விழுந்த நிலையில் சென்னை அணி மும்பைக்கு எதிராக தடுமாறியது. இந்த நிலையில் பவுலிங் பிட்சில், மும்பை பவுலிங்கை அடித்து துவம்சம் செய்தார் அம்பதி ராயுடு.

செம பேட்டிங்

செம பேட்டிங்

இந்த போட்டி காரணமாக தற்போது அம்பதி ராயுடுவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார். அம்பதி ராயுடு இந்திய அணியில் 4வது இடத்தில் விளையாட வேண்டும் என்று தீவிரமாக முயன்று வருகிறார். கடந்த உலகக் கோப்பை தொடரிலேயே இந்திய அணியில் இணைய அவர் முயன்றார். அப்போது இந்திய அணியிலும் பெரிய அளவில் 4வது இடத்திற்கு வெற்றிடம் நிலவியது.

மோசம் ஆனால் என்ன

மோசம் ஆனால் என்ன

இந்த இடத்தில் ஆடிய விஜய் சங்கர் சரியாக விளையாடவில்லை. அதேபோல் பண்ட், கே எல் ராகுல் ஆகியோரும் சரியாக விளையாடவில்லை. இதனால் இந்திய அணி, இந்த இடத்தில் ஆட சரியாக ஆள் இல்லாமல் திணறியது. ஆனால் இப்படிப்பட்ட நிலையிலும் கூட, இந்த இடத்திற்கு அம்பதி ராயுடு தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு அம்பதி ராயுடு மற்றும் தேர்வு குழு இடையே நிலவிய மோதல்தான் காரணமா என்று கூறப்பட்டது.

மோதல் என்ன மோதல்

மோதல் என்ன மோதல்

விஜய் சங்கர் தேர்வை அம்பதி ராயுடு கிண்டல் செய்ததால், இந்த மோதல் ஏற்பட்டது. அதன்பின் இவரால் இந்திய அணிக்கு திரும்ப முடியவில்லை. இந்த நிலையில் அம்பதி ராயுடுவைஇந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழும்ப தொடங்கி உள்ளது. இந்திய அணியில் டி20 டீமில் எடுக்க வேண்டும். உலகக் கோப்பை டி20 தொடரில் அடுத்த வருடம் கலந்து கொள்ள அனுப்ப வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

பிசிசிஐ அழுத்தம்

பிசிசிஐ அழுத்தம்

அதிலும் பிசிசிஐக்கு இது தொடர்பாக பலரும் அழுத்தம் வைத்து வருகிறார்கள். இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் பலர் இப்படி அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். பல மூத்த வீரர்கள் டிவிட்டரில் அம்பதி ராயுடுவிற்காக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக முன்னாள் வீரர் மற்றும் சிஎஸ்கே ஸ்பின் பவுலர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சென்னை அணியில் அம்பதி ராயுடு நல்ல பார்மில் இருக்கிறார். அவரால் சென்னை அணி நல்ல தொடக்கத்தை கொடுத்து உள்ளது.

தவறு

தவறு

கடந்த உலகக் கோப்பையில் அவரை அணியில் எடுத்து இருக்க வேண்டும். 2019 உலகக் கோப்பை அணியில் அவர் விளையாடாதது மிகப்பெரிய அநீதி. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி இது. அவர் இனியாவது கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும். அவரின் திறமையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இவரை போன்றவர்களை அணியில் எடுப்பது , அணிக்குத்தான் வலு சேர்க்கும் என்று ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, September 21, 2020, 19:33 [IST]
Other articles published on Sep 21, 2020
English summary
IPL 2020: People and former players supporting Ambati Rayudu to include him in Team India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X