For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியால் மட்டுமே முடியும்.. மூச்சு கூட விட முடியவில்லை.. மிக மோசமாக கஷ்டப்பட்ட ஏபிடி.. என்ன நடந்தது?

துபாய்: நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கடுமையான வெப்பநிலை காரணமாக வீரர்கள் மிக மோசமாக அவதிப்பட்டனர். நேற்று நடந்த சில சம்பவங்கள் ஐபிஎல் போட்டி நடக்கும் அமீரகத்தின் வெப்பநிலை குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது.

நேற்று மும்பை மற்றும் பெங்களூருக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தொடக்கத்தில் இருந்து இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக சென்றது. 201 ரன்கள் என்ற இமாலய இலக்கை பெங்களூர் அடிக்க.. அதை கடைசி நொடி வரை திரில்லாக சேஸ் செய்து மும்பை டிரா செய்ய.. போட்டி சூப்பர் ஓவர் வரை நீண்டது.

சூப்பர் ஓவரிலும் மும்பை அணியை பெங்களூர் 7 ரன்களுக்கு முடக்கியது. ஆனால் அதையும் அடிக்க முடியாமல்., திணறி திணறி பும்ரா ஓவரில் கடைசி பந்தில் கோலி பவுண்டரி அடிக்க பெங்களூர் அசத்தல் வெற்றிபெற்றது .

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த போட்டியில் கவனிக்க வேண்டிய விஷயம் என்று பார்த்தால்.. அது வெப்பநிலைதான். துபாயின் கடுமையான வெப்பநிலை காரணமாக வீரர்கள் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியாமல் அவதிக்கப்பட்டனர். நேற்று துபாயில் 40டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை நிலவியது. இதனால் வீரர்கள் மைதானத்தில் பீல்டிங் செய்யும் போது மிக கடுமையாக சிரமப்பட்டனர்.

சிரமம்

சிரமம்

களத்தில் நீண்ட நேரம் நிற்கும் கீப்பர்கள், கேப்டன்கள் எல்லாம் வியர்வை காரணமாக கடுமையாக அவதிப்பட்டனர். உடலில் நீரின் அளவு குறைந்து நேற்று பல வீரர்கள் சிரமப்பட்டனர். நேற்று மும்பை பேட்டிங் செய்த போது போட்டி முழுக்க ஏபி டிவில்லியர்ஸ்தான் கீப்பிங் செய்தார். இதனால் அவர் மிக மோசமான களைப்பில் இருந்தார்.

முடியவில்லை

முடியவில்லை

போட்டிக்கு நடுவே உடலில் நீர் சத்தை இழந்து, கீப்பிங் கூட செய்ய முடியாமல் சிரமப்பட்டார். இதனால் அவருக்கு பயிற்சியாளர் குழுவில் இருக்கும் சப்போர்ட் குழு ஆட்கள் வந்து குளுக்கோஸ் கொடுக்கும் நிலை கூட ஏற்பட்டது. 20 ஓவர்கள் கீப்பிங் செய்துவிட்டு.. அதன்பின் சூப்பர் ஓவர் பிடிக்க டி வில்லியர்ஸ் வந்தார். ஆனால் கடுமையான களைப்பில் இருந்தவரால் பெரிய அளவில் அதிரடி ஷாட்களை ஆட முடியவில்லை.

ஆடவில்லை

ஆடவில்லை

அதேபோல் போட்டி முடிந்த பின் பிளேயர் ஆப் தி மேட்ச் விருது வாங்க கூட ஏபிடி வரவில்லை. காரணம் போட்டி முழுக்க அவர் விளையாடி களைப்பில் இருந்த காரணத்தால், அறையிலேயே ஓய்வு எடுத்துவிட்டார். இதேபோல்தான் நேற்று பொல்லார்டும் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய முடியாமல் களைப்பில் இருந்தார். இன்னொரு பக்கம் இஷான் கிஷான் களைப்பு காரணமாக சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய வரவில்லை.

வெப்பநிலை

வெப்பநிலை

துபாயில் இருக்கும் கடுமையான வெப்பநிலைதான் இதற்கு காரணம். பாலைவன சூடு காரணமாக இங்கு நீண்ட நேரம் கிரிக்கெட் விளையாட முடியாது. ஆனால் இதே மைதானத்தில்தான் சிஎஸ்கே கேப்டன் தோனி திறமையாக செயல்படுகிறார். சிஎஸ்கேவின் மூன்று போட்டிகளிலும் அவருக்கு டி-ஹைட்ரேஷன் பிரச்சனை வரவில்லை. துடிப்பாக இருந்தார். பாய்ந்து பாய்ந்து கேட்ச்களை பிடித்தார்.

உடல்நிலையில் சிக்கல் இல்லை

உடல்நிலையில் சிக்கல் இல்லை

அதேபோல் இவரின் உடல்நிலையும் பெரிய அளவில் பாதிக்கவில்லை. இளம் வீரர்கள் இஷான் கிஷான் போன்றோர் கூட இந்த வெப்பநிலையால் அவதிப்படும் போது இந்த வயதில் தோனி போட்டியின் ஒரு இன்னிங்ஸ் முழுக்க கீப்பிங் செய்து கொண்டு, கேப்டன்சியும் செய்தார். இந்த வயதில் துடிப்பாக இருக்கும் அவரை பாராட்ட வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Tuesday, September 29, 2020, 9:17 [IST]
Other articles published on Sep 29, 2020
English summary
IPL 2020: Players got dehydration during the Bangalore Mumbai match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X