For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பருந்தாக மாறிய "பூரான்".. கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த சேவ்.. பஞ்சாப் போட்டியில் பரபர சம்பவம்!

சார்ஜா: கிரிக்கெட் உலகின் மிக சிறந்த "சேவிங்" ஒன்றை இன்று பஞ்சாப் வீரர் நிகோலஸ் பூரான் சார்ஜா மைதானத்தில் நிகழ்த்தி உள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்றது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 223 ரன்கள் எடுத்து அதிர வைத்தது.

தம்பி.. விக்கெட் எடுத்துட்டு ஸீனா போடுற? இளம் வீரரை கலங்க வைத்து அனுப்பிய மயங்க் அகர்வால்!தம்பி.. விக்கெட் எடுத்துட்டு ஸீனா போடுற? இளம் வீரரை கலங்க வைத்து அனுப்பிய மயங்க் அகர்வால்!

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் வீரர் மயங்க் அகர்வால் 50 பந்துகள் பிடித்த மயங்க் 106 ரன்கள் எடுத்தார். 54 பந்துகள் பிடித்த கே.எல் ராகுல் 69 ரன்கள் எடுத்தார். அதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் இமாலய இலக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆடியது.

ஏன் கட்டாயம்

ஏன் கட்டாயம்

ஆனாலும் தொடக்கத்தில் இருந்து ராஜஸ்தான் அதிரடியாக ஆடியது. முதலில் இறங்கிய ஜோஸ் பட்லர் 4 ரன்களுக்கு அவுட்டானார். ஸ்டிவ் ஸ்மித் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். இன்னொரு பக்கம் சஞ்சு சாம்சன் 52 ரன்கள் உடன் ஆடி வருகிறார். ராஜஸ்தான் அணியும் ஓவருக்கு 10 ரன்கள் எடுத்து அதிரடி காட்டி வருகிறது.

சின்ன மைதானம்

சின்ன மைதானம்

இப்படி சுவாரசியமாக நடந்து வரும் போட்டியில் இன்று நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரிக்கெட் உலகின் மிக சிறந்த "சேவிங்" ஒன்றை இன்று பஞ்சாப் வீரர் நிகோலஸ் பூரான் சார்ஜா மைதானத்தில் நிகழ்த்தி உள்ளார். 8வது ஓவரின் 4வது பந்தில் முருகன் அஸ்வின் பந்தை ஸ்மித் பறக்கவிட்டார். பேக்வேர்ட் ஸ்கோயர் லெக் நோக்கி பந்தை ஸ்மித் பறக்கவிட்டார்.

சிறப்பான கேட்ச்

சிறப்பான கேட்ச்

கண்டிப்பாக இந்த ஷாட் சிக்ஸ் நோக்கிதான் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு வேகமாக ஓடிவந்த நிக்கோலஸ் பூரான் வேகமாக தாவி, பந்தை ஒரு கையால் பிடித்தார். அதுவும் சிக்ஸ் லைனுக்குள் தாவி குதித்து, காலை கீழே வைக்காமல், பந்தை பிடித்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் கீழே விழுவதற்கு முன் பந்தை இன்னொரு கைக்கு மாற்றி, அந்த பந்தை தூக்கி எறிந்தார். பந்து சிக்ஸ் செல்ல கூடாது என்று வேகமாக அதை தூக்கி எறிந்து சேவ் செய்தார். இதில் ஸ்மித் ஒரே ஒரு ரன்தான் எடுத்தார். இந்த சேவ் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. பூரான் பருந்து போல பறந்து வந்து பந்தை பிடித்துள்ளார் என்று பலரும் பாராட்ட தொடங்கி உள்ளனர்.

சிறப்பான வீரர்

சிறப்பான வீரர்

இதுதான் கிரிக்கெட் வரலாற்றில் பெஸ்ட் சேவ் என்றும் பலர் பாராட்டி உள்ளனர். பஞ்சாப் அணிக்கு உலகின் பெஸ்ட் பீல்டர் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜாண்டி ரோட்ஸ்தான் பயிற்சி அளிக்கிறார். இதனால் அந்த அணியின் வீரர்கள் எல்லோரும் நன்றாக பீல்டிங் செய்து வருகிறார்கள். இன்று நிக்கோலஸ் பூரான் பீல்டிங் பார்த்துவிட்டு ஜாண்டி ரோட்சே எழுந்து நின்று கைதட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, September 28, 2020, 12:32 [IST]
Other articles published on Sep 28, 2020
English summary
IPL 2020: Punjab Pooran did a best save in the world against Rajasthan today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X