For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போராடிய வில்லியம்சன்.. அதிர வைத்த ரபாடா.. ஹைதராபாத் சரண்டர்.. ஐபிஎல் பைனலில் டெல்லி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பிளே-ஆஃப் சுற்றின் இரண்டாம் தகுதிப் போட்டியில் வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் தவான் அரைசதம் மற்றும் ரபாடாவின் 4 விக்கெட்கள் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கேன் வில்லியம்சன் 67 ரன்கள் அடித்தும் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது.

நம்பி அனுப்பிய பாண்டிங்.. போட்டியை மாற்றிய அதிரடி மன்னன்.. பிளே-ஆஃப்பில் நடந்த தரமான சம்பவம்!நம்பி அனுப்பிய பாண்டிங்.. போட்டியை மாற்றிய அதிரடி மன்னன்.. பிளே-ஆஃப்பில் நடந்த தரமான சம்பவம்!

டெல்லி பேட்டிங்

டெல்லி பேட்டிங்

இந்தப் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி மார்கஸ் ஸ்டோய்னிஸ்-ஐ துவக்க வீரராக இறக்கி முதல் ஆச்சரியம் அளித்தது. அவர் 27 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். அடுத்து மற்றொரு துவக்க வீரர் தவானும் அதிரடியில் தெறிக்கவிட்டார்.

தவான், ஹெட்மயர்

தவான், ஹெட்மயர்

தவான் 50 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். 6 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து இருந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஷிம்ரான் ஹெட்மயர் அதிரடி ஆட்டம் ஆடி 22 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். இதை அடுத்து டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.

ஹைதராபாத் தடுமாற்றம்

ஹைதராபாத் தடுமாற்றம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சில் பெரிதாக ஏமாற்றம் அளித்தது. அடுத்ததாக பேட்டிங்கில் துவக்கத்தில் அந்த அணி சொதப்பியது. துவக்க வீரராக இறங்கிய ப்ரியம் கார்க் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். டேவிட் வார்னர் முக்கியமான இந்தப் போட்டியில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

மனிஷ் பாண்டே 21 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேசன் ஹோல்டர் 11 ரன்களில் வெளியேறினார். நான்காம் வரிசையில் இறங்கிய கேன் வில்லியம்சன் அணியைக் காப்பாற்ற போராடினார். அவ்வப்போது சிக்ஸ் அடித்தார்.

அவர் 67 ரன்கள் சேர்த்த போதும் அவரது விக்கெட் பறிபோன பின் ஹைதராபாத் அணி சரிவை சந்தித்தது. அப்துல் சமத் 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஷித் கான் 7 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்தார். கோஸ்வாமி டக் அவுட் ஆனார்.

ரபாடா

ரபாடா

டெல்லி அணியின் ரபாடா 19வது ஓவரில் திருப்பம் ஏற்படுத்தினார். ஒரே ஓவரில் சமத், கோஸ்வாமி, ரஷித் கான் விக்கெட்களை வீழ்த்தினார். அவர் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார். ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

வெற்றி

வெற்றி

இதை அடுத்து ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வி அடைந்தது. வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க உள்ளது டெல்லி.

Story first published: Monday, November 9, 2020, 10:05 [IST]
Other articles published on Nov 9, 2020
English summary
IPL 2020 Qualifier 2 DC vs SRH : DC beat SRH by 17 runs and enter finals
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X