For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுதான் அவங்க பண்ண தப்பு.. சன்ரைசர்ஸ் செய்த சொதப்பல்.. மோசமான தோல்வி.. விமர்சகர்கள் விளாசல்!

அபுதாபி : டெல்லி கேபிடல்ஸ் அணியிடம், பிளே-ஆஃப் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

முக்கியமான போட்டி என்ற போதும் ஹைதராபாத் அணி பல தவறுகளை செய்தது. அதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

போராடிய வில்லியம்சன்.. அதிர வைத்த ரபாடா.. ஹைதராபாத் சரண்டர்.. ஐபிஎல் பைனலில் டெல்லி!போராடிய வில்லியம்சன்.. அதிர வைத்த ரபாடா.. ஹைதராபாத் சரண்டர்.. ஐபிஎல் பைனலில் டெல்லி!

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 189 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தவான் 78 ரன்கள் குவித்தார். ஹெட்மயர் 42, ஸ்டோய்னிஸ் 38 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ஆடிய ஹைதராபாத் அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

பீல்டிங் தவறுகள்

பீல்டிங் தவறுகள்

ஹைதராபாத் அணி பீல்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்தது. ரஷித் கான் ஓவர் த்ரோ செய்து ஒரே பந்தில் ஆறு ரன்கள் கொடுத்தார். நடராஜன் ஒரு ஃபோரை தடுக்கத் தவறினார். போட்டி முழுவதும் இது போன்ற சில தவறுகள் தொடர்ந்து நடந்தது.

நழுவிப் போன கேட்ச்கள்

நழுவிப் போன கேட்ச்கள்

அதே போல, பல கேட்ச் வாய்ப்புகளும் பறிபோனது. டெல்லி அணியில் அதைக் ரன் எடுத்த தவான், ஹெட்மயர், ஸ்டோய்னிஸ் என மூவரும் கொடுத்த கேட்ச்களை ஹைதராபாத் அணி வீரர்கள் தவறவிட்டனர். அது போட்டியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

ரஷித் கான் எங்கே?

ரஷித் கான் எங்கே?

ஹைதராபாத் அணியில் கட்டுகோப்பாக பந்து வீசிய ஒரே பந்துவீச்சாளர் ரஷித் கான் மட்டுமே. அவரை பவர் பிளே ஓவர்களில் டெல்லி ரன் குவித்த போது பயன்படுத்த தவறினார் கேப்டன் டேவிட் வார்னர். அது அந்த அணியின் வெற்றி வாய்ப்பை பாதித்தது.

சேஸிங் ஏமாற்றம்

சேஸிங் ஏமாற்றம்

அடுத்து 190 ரன்கள் என்ற கடினமான சேஸிங்கில் வார்னர் விக்கெட் விரைவாக வீழ்ந்த நிலையில், நிலைத்து ஆடிய கேன் வில்லியம்சனுக்கு யாரும் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அப்துல் சமத் ஒத்துழைப்பு அளித்து ஆடிய போது தேவைப்படும் ரன் ரேட் 12 ரன்களை தாண்டி இருந்தது. இதுவே தோல்விகளுக்கு காரணம் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Monday, November 9, 2020, 11:45 [IST]
Other articles published on Nov 9, 2020
English summary
IPL 2020 Qualifier 2 DC vs SRH : Reasons for SRH loss
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X