For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அது எப்படி சிஎஸ்கே ஜெயிச்சுகிட்டே இருக்கு.. வெளியான ரகசியம்.. புட்டு புட்டு வைத்த ராகுல் டிராவிட்!

மும்பை : ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் அணி என்றால் அது மிகை அல்ல.

இதுவரை அந்த அணி பிளே - ஆஃப் செல்லாத சீசனே இல்லை. அந்த அணியின் வெற்றிக்கு காரணம் கேப்டன் தோனி என ஒரே வார்த்தையில் பலரும் பதில் சொன்னாலும், அந்த அணி நிர்வாகமும் அதற்கு ஒரு முக்கிய காரணம்.

அது குறித்து அதிகம் வெளியில் தெரியாத பல தகவல்களை ஒரு புத்தகத்தில் கூறி இருக்கிறார் முன்னாள் இந்திய அணி ஜாம்பவான் ராகுல் டிராவிட்.

கௌரவ பதவி பெற்றார்

கௌரவ பதவி பெற்றார்

ராகுல் டிராவிட் இந்திய அணியின் தடுப்புச் சுவர் என அறியப்படுபவர். அவர் இந்திய அணியில் ஆடிய போது, அவரது கிரிக்கெட் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் அவருக்கு இந்தியா சிமெண்ட்ஸ் கம்பெனியில் கௌரவ பதவி அளிக்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

அதே இந்தியா சிமெண்ட்ஸ் கம்பெனியின் உரிமையாளர் சீனிவாசன் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் உரிமையாளர். அந்த அணியின் கேப்டன் தோனி கூட அதே நிறுவனத்தில் கௌரவ இயக்குனராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே வெற்றிகள்

சிஎஸ்கே வெற்றிகள்

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் உள்ள எட்டு அணிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவிக்கும் ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயரை பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை கோப்பை வென்றாலும் அந்த அணி பிளே - ஆஃப் செல்லாத சீசன்களும் உண்டு.

புத்தகம்

புத்தகம்

ஆனால், மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே - ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத சீசனே இல்லை. அந்த வெற்றிப் பாதை குறித்து டிராவிட், "கிரிக்கெட் 2.0 - இன்சைட் டி20 ரெவல்யூஷன்" என்ற புத்தகத்தில் ஒரு பகுதியில் கூறி இருக்கிறார்.

அதிக அனுபவம்

அதிக அனுபவம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர்கள் ஐபிஎல் தொடருக்கு வரும் முன்பே கிரிக்கெட் அணிகளை வைத்து இருந்தார்கள். அதனால், ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் மற்ற அணிகளைக் காட்டிலும் அதிக அனுபவம் கொண்டு இருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

தேர்வு செய்யும் முறை

தேர்வு செய்யும் முறை

சிஎஸ்கே அணி அதன் உரிமையாளர்களின் அதிக பட்ச முக்கியமான அணி மட்டுமே. எனவே ஒரு வகையில் மைதானங்களில் அவர்களின் ஆட்கள் எப்போதும் இருப்பார்கள். அவர்கள் வீரர்களை தேர்வு செய்யும் முறை மற்ற அணிகளை விட மிகவும் சிறப்பாக அமைந்து இருந்தது என்றார் டிராவிட்.

சிறந்த பந்துவீச்சாளர்கள்

சிறந்த பந்துவீச்சாளர்கள்

மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோசமாக காட்சி அளிக்க முக்கிய காரணம் அவர்கள் அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதை கூறிய டிராவிட், அந்த இடத்தில் தான் சிஎஸ்கே அணி ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டு, நல்ல பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

மேலும், சிஎஸ்கே அணியில் துவக்கம் முதல் இடம் பெற்று வரும் தோனி, சுரேஷ் ரெய்னா, டிவைன் பிராவோ ஆகியோரை குறிப்பிட்டு, அது தான் சிஎஸ்கே அணி தொடர்ந்து சிறப்பான வீரர்களை தேர்வு செய்ய முக்கிய காரணம் என்றார் டிராவிட்.

காரணம் இவர்கள் தான்

காரணம் இவர்கள் தான்

"நான்கு இடங்களை நிரப்ப நிறைய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். ஆனால், குறிப்பிட்ட அளவு மட்டுமே சிறந்த இந்திய வீரர்கள் உள்ளனர். அவர்களை சிஎஸ்கே அணி எளிதாக பெற முக்கிய காரணம் அந்த கோர் (Core) வீரர்கள் தான்" என குறிப்பிட்டார் டிராவிட்.

உரிமையாளர்கள்

உரிமையாளர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பின் தோனி மட்டுமல்ல, தோனியை தேர்வு செய்த அதன் உரிமையாளர்கள் தான் என சுட்டிக் காட்டி உள்ளார் ராகுல் டிராவிட். 2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, March 26, 2020, 17:38 [IST]
Other articles published on Mar 26, 2020
English summary
IPL 2020 : Rahul Dravid reveals the secrets of CSK and RCB in IPL IPL 2020 : Rahul Dravid reveals the secrets of CSK and RCB in IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X