For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விஸ்வரூபம் எடுத்த மோதல்.. சிஎஸ்கேவில் இருந்து மொத்தமாக நீக்கப்படும் ரெய்னா? டிவிட்டரில் ஷாக் சண்டை

துபாய்: சிஎஸ்கே அணியில் முக்கியமான வீரராக கருதப்படும் ரெய்னா இனி சிஎஸ்கேவிற்கு திரும்பவே வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். சமீபத்தில் நடந்த சம்பவங்கள் சில இதை உறுதி செய்கிறது.

சிஎஸ்கே அணி தற்போது ஐபிஎல் 2020 தொடரை தோல்வியோடு தொடங்கி உள்ளது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை வெற்றிபெற்றது. ஆனாலும் அடுத்தடுத்த போட்டிகளில் சென்னை வரிசையாக தோல்வி அடைந்தது.

சென்னையின் தோல்விக்கு மோசமான பேட்டிங் ஆர்டர்தான் காரணமாக பார்க்கப்படுகிறது. ரெய்னா அணியில் இருந்து விலகியதும், அம்பதி ராயுடு காயம் காரணமாக அவதிப்படுவதும் பேட்டிங் சொதப்புவதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது .

ரெய்னா ஏன்?

ரெய்னா ஏன்?

சென்னை அணியில் இருந்து ரெய்னா வெளியேறுவதற்கு நிறைய காரணங்கள் கூறப்படுகிறது. முதல் காரணம், ரெய்னாவின் குடும்பத்தினர் சிலர் கொள்ளையர்கள் மூலம் கொல்லப்பட்டது. இவரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், இவரின் உறவினர்களை கொன்றுவிட்டு, பொருட்களை திருடியதாக புகார் உள்ளது. ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற இதுதான் முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது.

அடுத்த காரணம்

அடுத்த காரணம்

இன்னொரு பக்கம் தோனிக்கும் ரெய்னாவிற்கும் சண்டை வந்தது. இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதனால்தான் தோனி ரெய்னா குறித்து எதுவும் பேசவில்லை. ரெய்னா அணியில் இடம்பெறாதது குறித்து தோனி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையே பெரிய அளவில் மோதல் உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

ஸ்ரீனிவாசன்

ஸ்ரீனிவாசன்

இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணியின் நிறுவனர் ஸ்ரீனிவாசன் மற்றும் ரெய்னா இடையே மோதல் நிலவியது. ரெய்னாவிற்கு சிஎஸ்கே கொடுத்த ரூம் சரியில்லை என்று புகார் உள்ளது. இதை ரெய்னா தட்டி கேட்ட காரணத்தால் சண்டை வந்தது என்கிறார்கள். சிலருக்கு திறமை இருப்பதால் திமிர் வந்துவிடுகிறது, ரெய்னாதான் பணத்தை இழக்க போகிறார், என்று ஸ்ரீனிவாசன் வெளிப்படையாக கூறியது குறிப்பிடத்தக்கது.

என்ன வருவார்

என்ன வருவார்

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு ரெய்னா மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சென்னை அணியின் பேட்டிங் சரியில்லை என்பதால் தோனி மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று சிஎஸ்கே நிர்வாகம் இதை மறுத்தது. சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன் அளித்துள்ள பேட்டியில், ரெய்னாவை சிஎஸ்கேவில் இந்த முறை எதிர்பார்க்க முடியாது. அவர் இந்த தொடரில் கலந்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். சிஎஸ்கே அணிக்காக அவர் இந்த முறை விளையாடமாட்டார் .

மதிப்பு

மதிப்பு

அவரின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவருக்கான தனிப்பட்ட வாழ்க்கையை நாங்கள் மதிக்கிறோம். அவரின் அணியில் சேர்ப்பது குறித்து நாங்கள் யோசிக்கவில்லை.அதே சமயம் சிஎஸ்கே மீண்டு வரும். சிஎஸ்கே வேகமாக மீண்டும் வந்து, வெற்றி பாதைக்கு செல்லும். விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர்களுக்கு என்ன செய்வது என்று தெரியும், என்று குறிப்பிட்டு இருந்தார்.

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில்தான் தற்போது சிஎஸ்கேவை டிவிட்டரில் ரெய்னா அன்பாலோ செய்ததாக பொய்யான தகவல்கள் வந்தது. இது டிவிட்டரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சிஎஸ்கே ரசிகர்களுக்கும், ரெய்னா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால் ரெய்னா தொடர்ந்து சிஎஸ்கேவை பாலோ செய்து வருகிறார். சிஎஸ்கேவும் அவரையும் பாலோ செய்து வருகிறது.

வர வாய்ப்பு இல்லை

வர வாய்ப்பு இல்லை

ஆனால் இன்னும் சிஎஸ்கேவிற்கும் ரெய்னாவிற்கும் இடையில் மோதல் சரியாகவில்லை என்று கூறுகிறார்கள். இனி சென்னை அணிக்கு ரெய்னா திரும்ப வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள். மொத்தமாக இந்த தொடர் மட்டுமில்லாமல் அனைத்து தொடரில் இருந்தும் ரெய்னா வெளியேற வாய்ப்புள்ளது. இனி சென்னைக்கு ரெய்னா திரும்புவார் என்று எதிர்பார்க்க வேண்டாம், அவர் மொத்தமாக அணியில் இருந்து வெளியேற போகிறார் என்று கூறுகிறார்கள்.

Story first published: Sunday, September 27, 2020, 16:31 [IST]
Other articles published on Sep 27, 2020
English summary
IPL 2020: Raina won't make it back to CSK anymore not only this season says sources.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X