For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சண்டை செய்யணும்.. சிஎஸ்கேவிற்கு ஷார்ஜாவில் பாடம் எடுத்த ராஜஸ்தான்.. தோனிக்கு கடுமையான நெருக்கடி!

சார்ஜா: பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் சேசிங் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. ஒரு டி20 போட்டி எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று என்பதற்கு உதாரணமாக இன்றைய போட்டி இருந்தது.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் இன்று ''கட்டுக்கடங்காத காட்டு அடி அடித்தது''. ராஜஸ்தானின் பவுலிங்கை அனைத்து திசைக்கும் பஞ்சாப் பறக்கவிட்டது.

மொத்தம் எத்தனை

மொத்தம் எத்தனை

தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 223 ரன்கள் எடுத்து அதிர வைத்தது. மயங்க் அகர்வால் 50 பந்துகள் பிடித்து 106 ரன்கள் எடுத்தார். 54 பந்துகள் பிடித்த கே.எல் ராகுல் 69 ரன்கள் எடுத்தார். இதனால் ராஜஸ்தானுக்கு ஒரு ஓவரில் 11.15 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கட்டாயம்

கட்டாயம்

ஆனால் அதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் கொஞ்சம் கூட திணறவில்லை. நீங்கள் எவ்வளவு ஸ்கோர் வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளுங்கள். நாங்களும் விடாமல் அடிப்போம் என்று ராஜஸ்தான் அணி எல்லா பக்கத்திற்கும் சிக்சர் பறக்கவிட்டது. சஞ்சு சாம்சன் மட்டும் இரண்டு முறை பந்துகளை சிக்ஸ் பறக்கவிட்டு அதை காணாமல் போக வைத்தார்.

பிரஷர் இல்லை

பிரஷர் இல்லை

223 ரன்கள் என்ற பெரிய இலக்கை சேஸ் செய்யும் எந்த பிரஷரும் இல்லாமல் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. ஒரு பக்கம் ஸ்மித் அரை சதம் அடித்தார். இன்னொரு பக்கம் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். இதில் 7 சிக்ஸ், 4 பவுண்டரி அடக்கம்.

சென்னை எப்படி

சென்னை எப்படி

ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் தோல்வியின் விளிம்பிற்கு சென்று கடைசியில் அதிரடியாக வென்றது. கடைசி வரை அணியின் சேசிங் மிக சிறப்பாக இருந்தது. ராஜஸ்தானின் இந்த சேசிங் காரணமாக தற்போது சென்னையின் சேசிங் ஸ்டைல் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. பெரிய ஸ்கோர்களை இப்படித்தான் சேஸ் செய்ய வேண்டும். 200க்கும் மேல் ஸ்கோர் இருந்தால் இப்படித்தான் அடிக்க வேண்டும் என்று சென்னைக்கு பலர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

தொடக்கம் அதிரடி

தொடக்கம் அதிரடி

ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் இருந்து 10+ ரன் ரேட் வைத்து இருந்தது. கடைசி ஓவரில் சிக்ஸ் அடிக்கலாம் என்று பொறுமையாக ஆடவில்லை. முதல் 10 ஓவருக்கே ராஜஸ்தான் அணி 102 ரன்கள் எடுத்து இருந்தது. கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தொடக்கத்திலேயே அந்த அணி அதிரடியாக ஆடியது . ஆனால் சென்னை அணியிடம் இந்த சேஸிங் வெறி இல்லை.

சென்னைக்கு பாடம்

சென்னைக்கு பாடம்

சென்னைக்கு எப்படி சேஸ் செய்ய வேண்டும் என்று தற்போது ராஜஸ்தான் பாடம் எடுத்துள்ளது. ஆட்டத்தில் ஜெயிக்கிறோமோ, இல்லையோ கடைசி வரை சண்டை செய்யணும் என்று ராஜஸ்தான் சண்டை செய்தது. சென்னை போல முக்கியமான கட்டத்தில் ராஜஸ்தான் டொக் வைத்து ஆடவில்லை. சென்னை போல கடைசி ஓவரில் மட்டும் சிக்ஸ் அடிக்கவில்லை.

இன்றைய போட்டி

இன்றைய போட்டி

இன்றைய போட்டியில் மிக சிறப்பாக பேட்டிங் செய்து ராஜஸ்தான் 223 ரன்களை சேஸ் செய்து வென்றுள்ளது.ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை முதல்முறை இப்படி நடக்கிறது. ராஜஸ்தான் அணி ராகுல் திவாதியை முன்பே இறக்கியதால் ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் குறைந்தது. ஆனால் கடைசியில் அவரும் அதிரடி காட்டி ஹாட் டிரிக் சிக்ஸ் அடித்தார். எப்படி போராட வேண்டும், எப்படி அதிரடியாக சேஸ் செய்ய வேண்டும், எப்படி வெல்ல வேண்டும் என்று ராஜஸ்தான் அணியின் ஒவ்வொரு வீரர்களும் சென்னை அணிக்கு சார்ஜா மைதானத்தில் பாடம் எடுத்துள்ளனர்.

Story first published: Sunday, September 27, 2020, 23:16 [IST]
Other articles published on Sep 27, 2020
English summary
IPL 2020: Rajasathan taught CSK how to chase big scores today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X