For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த நினைப்போடு ஆட வந்தால் இப்படித்தான் நடக்கும்.. ஸ்மித் சொன்ன ஒரு வார்த்தை.. விரைவில் செம டிவிஸ்ட்

துபாய்: நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் தோல்விக்கான காரணத்தை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பட்டியலிட்டார்.

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் தோல்வி அடைந்தது. வலுவாக இருந்த ராஜஸ்தான் வரிசையாக வெற்றிகளை குவித்து வந்த நிலையில் நேற்று தோல்வி அடைந்தது.

நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் 9 விக்கெட்டிற்கு வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் தோல்விக்கான காரணத்தை ஸ்மித் அடுக்கி உள்ளார். அதில், நாங்கள் போட்ட பிளான் வெற்றிபெறவில்லை. எங்கள் பிளான்படி எதுவும் நடக்கவில்லை. டி20 போட்டிகளில் சமயங்களில் இப்படித்தான் நடக்கும். சில விஷயங்களில் நாங்கள் முக்கியமான மாற்றங்களை செய்ய வேண்டும். நாங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும்.

டாஸ் வெல்லும்

டாஸ் வெல்லும்

டாஸ் எப்போதும் நமக்கு கை கொடுக்காது. அதனால் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். கொல்கத்தா அணி நன்றாக சேசிங் செய்யும். அதனால் நேற்று நாங்கள் பவுலிங் தேர்வு செய்தோம். அதேபோல் நாங்கள் நேற்று கொல்கத்தாவின் டெத் பவுலிங்கிற்கு அழுத்தம் கொடுக்க நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை.

தொடக்கம் எப்படி

தொடக்கம் எப்படி

நாங்கள் தொடக்கத்திலேயே நிறைய விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். நிறைய விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு பெரிய அழுத்தம் அளித்தது. ஷார்ஜாவில் விளையாடிவிட்டு வீரர்கள் நேரடியாக இங்கே வந்துள்ளனர். சார்ஜா மைதானத்தில் விளையாடிய நினைப்போடு பேட்ஸ்மேன்கள் வந்துவிட்டனர். இதனால்தான் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் சொதப்பி விட்டனர்.

சின்ன மைதானம்

சின்ன மைதானம்

சின்ன மைதானம் என்ற நினைப்போடு வந்தால் இப்படித்தான் நடக்கும். மைதானத்தின் அளவு இந்த போட்டியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பேட்டிங் செய்யும் போது எனக்கும் அந்த குழப்பம் இருந்தது. இதனால் சிக்ஸ், பவுண்டரி அடிக்கும் போது சரியாக கணித்து அடிக்க முடியவில்லை. புதிய மைதானங்களுக்கு நாங்கள் விரைவாக எங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நேற்று பிட்ச்

நேற்று பிட்ச்

நேற்று பிட்ச் பவுலிங் செய்ய வசதியாக இருந்தது. அதிலும் இரண்டாவது இன்னிங்சில் மொத்தமாக பிட்ச் பவுலிங் செய்ய சாதகமாக மாறியது என்று ஸ்மித் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் ஸ்மித் குறிப்பிட்டது உண்மைதான், இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்கோர் அடிப்பது கஷ்டம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இனி வரும் நாட்களில் பிட்ச் வேகமாக வறட்சியாக மாறும்.

ஸ்பின் பவுலர்கள்

ஸ்பின் பவுலர்கள்

அப்போது ஸ்பின் பவுலிங் நன்றாக எடுபடும். பேட்டிங் செய்வது சிரமமாக இருக்கும். மொத்தமாக ஐபிஎல்லின் இரண்டாவது பாதி தலைகீழாக மாறும். நிறைய டிவிஸ்ட்களை எதிர்பார்க்கலாம். முதல் பாதி ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தியது போல இரண்டாவது பாதியில் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இப்போது தொடர் வெற்றிகளை குவிக்கும் அணிகள் வரும் நாட்களில் தோல்வி அடைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Thursday, October 1, 2020, 21:02 [IST]
Other articles published on Oct 1, 2020
English summary
IPL 2020: Rajasthan captain Smith reveals the reason for defeat against KKR yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X