எவ்வளவு திமிர்.. இப்படி செய்தால் எதிர்காலமே இருக்காது.. சிஎஸ்கேவை கடுப்பாக்கிய ராகுல்..என்ன நடந்தது?

சார்ஜா: நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வீரர் ராகுல் திவேதியா செய்த சில செயல்கள் சென்னை ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணி சென்னையை அடித்து துவம்சம் செய்துள்ளது. பேட்டிங், பவுலிங் என்று அனைத்து தளங்களிலும் சென்னையை நேற்று ராஜஸ்தான் காலி செய்தது.

பெரிய டீம்களிடம் எளிதாக வென்றுவிட்டு, சின்ன டீம்களிடம் தோல்வி அடைவதே சென்னையின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியிலும் சென்னை தோல்வி அடைந்தது .

என்ன காரணம்

என்ன காரணம்

நேற்று சென்னைக்கு எதிராக ராஜஸ்தான் வெற்றிபெற முக்கிய காரணங்களில் ஒருவர் சஞ்சு சாம்சான். 32 பந்துகளை மட்டுமே பிடித்த இவர் 74 ரன்களை குவித்தார். இதில் 9 சிக்ஸ் அடக்கம். இன்னொரு காரணமாக இருந்தவர் ராஜஸ்தான் பவுலர் ராகுல் திவேதியா. இவர்தான் நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கேம் சேஞ்சராக இருந்தார்.

இன்னொரு வீரர்

இன்னொரு வீரர்

நேற்று சென்னையின் மூன்று முக்கியமான விக்கெட்டுகளை இவர்தான் எடுத்தார். ராகுல் திவேதியா 7வது ஓவரின் 4வது பந்தில் வாட்சனின் விக்கெட்டை எடுத்தார். அந்த விக்கெட்தான் சென்னை அணிக்கு முதல் சரிவாக அமைந்தது. அதன்பின் மீண்டும் 9வது ஓவரை வீச வந்தார் ராகுல் திவாதியா. சென்னை அணி இந்த முறை சாம் கரனை முன்பே களத்தில் இறக்கி டெஸ்ட் செய்தது. ஆனால் அவரின் விக்கெட்டையும் ராகுல் எடுத்தார்.

விக்கெட் எடுத்தார்

விக்கெட் எடுத்தார்

அடுத்த பாலிலேயே புதிய வீரர் ருதுராஜ் விக்கெட்டையும் வீழ்த்தினார். அடுத்தடுத்து 9வது ஓவரின் 5 மற்றும் 6வது பந்தில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். சென்னை அணியின் தோல்விக்கு இவரே காரணமாக இருந்தார். ஆனால் இவரின் செயல் களத்தில் சர்ச்சையை சந்தித்துள்ளது. ஒவ்வொரு முறை விக்கெட் எடுத்த போதும் இவர் தனது காதை மூடிக்கொண்டார்.

காதை மூடிக்கொண்டார்

காதை மூடிக்கொண்டார்

ஒவ்வொரு முறை விக்கெட் எடுத்ததும், சென்னை வீரர்களை கடுப்பாக்கும் வகையில் இவர் தனது காதை மூடிக்கொண்டார். சென்னை அணி வீரர்களை இந்த விஷயம் டென்சன் ஆக்கியது. வேண்டும் என்றே சென்னை வீரர்களை கோபப்படுத்தும் வகையில் இவர் செயல்பட்டார். அதோடு களத்தில் இவர் ஆட்டிடியூட் சரியாக இல்லை என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது.போட்டி முழுக்க திமிராகவே செயல்பட்டார்.

ஒரே ஒரு போட்டி

ஒரே ஒரு போட்டி

ஒரே ஒரு போட்டியில் விக்கெட் எடுத்துவிட்டு இப்படி சீன் போடுகிறார். அதிலும் சக இந்திய வீரர்களையே இப்படி சீண்டுகிறார். இப்படி எல்லாம் செய்தால் கிரிக்கெட்டில் எதிர்காலம் இருக்காது. அவர் உடனே தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். அவருக்கு திறமை இருக்கிறது., அதற்காக சக வீரர்களை இப்படி கோபப்படுத்தும் வகையில் செயல்படுவதை அவர் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: Rajasthan Player Rahul Tewatia slammed for his celebration style
Story first published: Wednesday, September 23, 2020, 10:39 [IST]
Other articles published on Sep 23, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X