For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்தில் எப்படி எச்சில் தடவலாம்? களத்தில் நடந்த அந்த சம்பவம்.. உத்தப்பாவால் சிக்கலில் ஐபிஎல் வீரர்கள்

துபாய்: கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வீரர் ராபின் உத்தப்பா செய்த காரியம் ஒன்று பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

நேற்று மிகவும் பரபரப்பாக சென்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை கொல்கத்தா அணி வீழ்த்தியது. ராஜஸ்தானின் தொடர் வெற்றிக்கு நேற்று கொல்கத்தா முற்றுப்புள்ளி வைத்தது.

நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் 9 விக்கெட்டிற்கு வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

சர்ச்சை

சர்ச்சை

இந்த நிலையில் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வீரர் ராபின் உத்தப்பா செய்த காரியம் ஒன்று பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இவர் நேற்று பவுலரிடம் பந்தை வீசுவதற்கு முன் அதை எச்சில் தொட்டு துடைத்தார். பந்தை பொலிவாக்குவதற்காகவும், தேய்க்க தேய்க்க நன்றாக ஸ்விங் ஆகும் என்பதாலும் எச்சில் தொட்டு துடைத்தார்.

எப்படி

எப்படி

எப்போதும் கிரிக்கெட் வீரர்கள் இப்படி பந்துகளை எச்சில் தொட்டு துடைப்பது வழக்கம்தான். இதில் தவறு இல்லை. ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதால் இந்த பழக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் பந்தில் எச்சில் தொட்டு துடைக்க கூடாது என்று தடை விதிக்கபப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீரர்களுக்கு ஐபிஎல் நிர்வாகமும் அறிவுரை வழங்கி உள்ளது.

ஆனால் என்ன ?

ஆனால் என்ன ?

ஆனால் இந்த அறிவுரையை மீறி நேற்று உத்தப்பா பந்தில் எச்சில் தொட்டு தடவி உள்ளார். இது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. அவர் செய்தது விதி மீறல். அவர் இப்படி நடந்து இருக்க கூடாது. அவரால் மற்ற வீரர்களுக்கு தற்போது சிக்கல் என்று ராபின் உத்தப்பாவிற்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

சிக்கல்

சிக்கல்

இதனால் தற்போது ராஜஸ்தான் அணி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா, ராபின் உத்தப்பாவிற்கு எதிராக ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இவர் எச்சில் தடவிய பந்தை மற்ற வீரர்கள் நேற்று பயன்படுத்தினார்கள். இதனால் அவர்களின் பாதுகாப்பும் கேள்வி குறியாகி உள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில், பந்தில் இப்படி எச்சில் தடவுவது தவறு. இது அவரின் அணிக்கு மட்டுமின்றி எதிரணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இது ஐபிஎல் வீரர்களின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கும். வீரர்கள் கொரோனா காலத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Thursday, October 1, 2020, 11:36 [IST]
Other articles published on Oct 1, 2020
English summary
IPL 2020: Rajasthan player Robin Uthappa applied saliva on the ball yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X