For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீ பயப்படாம ஆடு.. உயர்ந்து நின்ற ஸ்மித்.. களத்தில் நடந்த ஆச்சர்யப்பட வைக்கும் சம்பவம்.. மனுஷன்யா!

சார்ஜா: ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இன்று ஆட்டத்திற்கு முன் எடுத்த முடிவு ஒன்று பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தற்போது நடந்து வருகிறது. சார்ஜா போன்ற சின்ன மைதானத்தில் போட்டி நடந்து வருகிறது.

ராஜஸ்தான், டெல்லி என இரண்டு அணியின் பேட்ஸ்மேன்களும் சார்ஜா மைதானத்தில் காட்டு அடி அடிப்பார்கள். இது மிகவும் சின்ன கிரவுண்டு என்பதால் இன்று இரண்டு அணிகளும் 200+ ரன்களை அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

IPL 2020: ராஜஸ்தான் அணியில் 2 மாற்றம்.. டாஸ் வென்ற ஸ்மித் பவுலிங் தேர்வு.. டெல்லி முதலில் பேட்டிங்! IPL 2020: ராஜஸ்தான் அணியில் 2 மாற்றம்.. டாஸ் வென்ற ஸ்மித் பவுலிங் தேர்வு.. டெல்லி முதலில் பேட்டிங்!

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் டெல்லி அணி தொடக்கத்தில் இருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பேட்டிங் இறங்கிய நொடியில் இருந்து அடுத்தடுத்து எதிர்பார்க்காத வகையில் விக்கெட்டுகளை இழந்தது. முதலில் ஜோப்ரா ஆர்ச்சர் ஓவரில் தவான் கேட்ச் கொடுத்து விக்கெட் ஆனார். இவர் ராஜஸ்தான் வீரர் ஜெய்ஷ்வாலிடம் கேட்ச் கொடுத்தார்.

மீண்டும் வந்தார்

மீண்டும் வந்தார்

அதன்பின் இதேபோல் ஆர்ச்சர் ஓவரில் பிரித்வி ஷா கேட்ச் கொடுத்து விக்கெட் ஆனார். இதனால் டெல்லி அணி தொடக்கத்தில் இருந்து திணறியது. அதன்பின் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் கொஞ்சம் அதிரடியாக ஆடினார். தொடக்கத்தில் இருந்து இவர் அதிரடி காட்டினார். மைதானம் சின்னது என்பதால் கண்ணை மூடிக்கொண்டு ஷ்ரேயாஸ் சுற்றினார்.

செம விக்கெட்

செம விக்கெட்

இந்த நிலையில்தான் ஷ்ரேயாஸ் விக்கெட்டை இளம் வீரர் ஜெய்ஷ்வால் எடுத்தார். சில்லி மிட் ஆப் திசையில் அடித்துவிட்டு ஓட நினைத்த ஷ்ரேயாசை மிட் விக்கெட் திசையில் இருந்த ஜெய்ஷ்வால் வேகமாக ஓடி வந்து விக்கெட் எடுத்தார். பந்தை எடுத்து, நொடிப்பொழுதில் அதை தூக்கி வீசி, டிரைக்ட் ஹிட் அடித்து ரன் அவுட் செய்தார். ஜடேஜா பீல்டிங் செய்வது போல துல்லியமாக வேகமாக ஜெய்ஷ்வால் பீல்டிங் செய்தார்.

இரண்டு போட்டிகள் ஆடினார்

இரண்டு போட்டிகள் ஆடினார்

ராஜஸ்தான் அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடிய ஜெய்ஷ்வால் சரியாக பேட்டிங் செய்யவில்லை , சாலை ஓரத்தில் பானிபூரி விற்று வறுமையான சூழ்நிலையில் இருந்து இவர் கிரிக்கெட் உலகிற்கு வந்துள்ளார். பெரிய சப்போர்ட் இன்றி வறுமையான பின்னணி கொண்டவர், முழுக்க முழுக்க தன்னுடைய திறமை மூலம் ஐபிஎல் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.

விக்கெட்

விக்கெட்

ஆனால் இவர் தனது முதல் போட்டியில் மோசமாக அவுட்டானர். இரண்டாவது போட்டியிலும் வந்த வேகத்தில் வெளியேறினார் . இதனால் இன்று நடக்கும் போட்டியில் ஜெய்ஷ்வால் ஆட மாட்டார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் எல்லோரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு ஸ்மித் இன்று ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

வாய்ப்பு கொடுத்தார்

வாய்ப்பு கொடுத்தார்

இவர் இரண்டாவது போட்டியில் அவுட்டாகி சென்ற போது.. அவரிடம் வேகமாக ஓடி வந்த ஸ்மித் ஆறுதல் கொடுத்து நம்பிக்கை ஊட்டினார். இந்த நிலையில் இன்றும் அவருக்கு வாய்ப்பு கொடுத்து.. நீ பயப்படாம ஆடு என்று ஊக்கம் கொடுத்தார். அவர் சொன்னது போல இன்று ஜெய்ஷ்வால் மிக முக்கியமான விக்கெட்டான ஷ்ரேயாஸ் விக்கெட்டை எடுத்துள்ளார். போட்டியின் திருப்பு முனையாக இவர் மாறினார். இந்த விக்கெட் விழுந்த பின் டெல்லி வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 9, 2020, 20:47 [IST]
Other articles published on Oct 9, 2020
English summary
IPL 2020: Rajasthan Royals skipper Smith decision to support Jaiswal changes the whole match flow.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X