For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொரோனா ஹீரோக்களுக்காக.. களமிறங்கிய கோலி டீம்.. நெகிழ வைத்த ஆர்சிபி!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அதை எதிர்த்து போராட உதவும் நல்ல உள்ளங்களை நினைவு கூர்ந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராடிய வர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஜெர்ஸியை அறிமுகம் செய்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

இந்த தொடர் முழுவதும் அந்த ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது அந்த அணி.

என்னங்க இது.. சிஎஸ்கே டீம் ரொம்ப பிஸியா இதைத் தான் பண்ணிக்கிட்டு இருக்காங்களா? என்னங்க இது.. சிஎஸ்கே டீம் ரொம்ப பிஸியா இதைத் தான் பண்ணிக்கிட்டு இருக்காங்களா?

ஐபிஎல்

ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடைபெற உள்ளது. இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. அதுவும் ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் தான் போட்டிகள் நடைபெற உள்ளது.

ஜெர்ஸி அறிமுகம்

ஜெர்ஸி அறிமுகம்

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையிலும் அதை எதிர்த்து மக்களுக்கு உதவி வரும் சிலரை தேர்வு செய்து அவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது விராட் கோலி தலைமையில் களமிறங்க உள்ள பெங்களூர் அணி. அதில் இந்த சீசனில் பயன்படுத்த உள்ள ஜெர்ஸியையும் அறிமுகம் செய்தது.

மை கோவிட் ஹீரோஸ்

மை கோவிட் ஹீரோஸ்

அந்த ஜெர்ஸியில் "மை கோவிட் ஹீரோஸ்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. தங்கள் முதல் போட்டியில் வீரர்கள் அணிந்து ஆடும் இந்த ஜெர்ஸியை ஏலத்தில் விட்டு அந்த தொகையை கிவ்இந்தியா எனும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்க உள்ளது அந்த அணி.

பாராட்டு

பாராட்டு

மேலும், இந்த தொடர் முழுவதும் இதே ஜெர்ஸியை அணிந்தே ஆட உள்ளனர் பெங்களூர் அணி வீரர்கள். இந்த ஜெர்ஸி அறிமுக விழாவில் விராட் கோலி, பார்த்திவ் பட்டேல் மற்றும் தேவ்தத் படிக்கல், சிம்ரன்ஜீத் சிங், ஹேதிகா ஷா மற்றும் சீஷன் ஜாவித் ஆகிய மூன்று பேருடன் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக அவர்கள் செய்த சேவைகள் குறித்து கேட்டு அறிந்து அவர்களை பாராட்டினர்.

Story first published: Thursday, September 17, 2020, 19:21 [IST]
Other articles published on Sep 17, 2020
English summary
IPL 2020 : Virat Kohli led Royal Challengers Bangalore team to wear My COVID heroes Jersey during the entire IPL 2020 tournament. They are also going sell these jerseys and donate.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X