For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி கூடவா ரெக்கார்டு பண்ணுவாரு.. கோலியின் புது ரெக்கார்டு.. வாயை பிளந்த ரசிகர்கள்!

துபாய் : ஐபிஎல் தொடரில் அரைசதம் அடிப்பதில் புதிய சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.

விராட் கோலி சாதனைகளில் இது புது ரகம். ஆம், குறைந்த பவுண்டரி அடித்து அரை சதம் அடித்துள்ளார் கோலி.

இது ஐபிஎல்-இல் வேறு எந்த பேட்ஸ்மேனும் செய்யாத சாதனையாகும். சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சாதனையை செய்தார்.

இந்த ஸ்பார்க் போதுமா? அவமானப்பட்டு கூனிக் கூறுகி.. எல்லாத்துக்கும் சேர்த்து வெளுத்த சிஎஸ்கே வீரர்!இந்த ஸ்பார்க் போதுமா? அவமானப்பட்டு கூனிக் கூறுகி.. எல்லாத்துக்கும் சேர்த்து வெளுத்த சிஎஸ்கே வீரர்!

பெங்களூர் அணி பேட்டிங்

பெங்களூர் அணி பேட்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதிய 44வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டி நடந்த மைதானம் மந்தமாக இருந்ததால் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடியது.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

பெங்களூர் அணி துவக்கம் முதலே படு நிதானமாக ஆடி வந்தது. மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்காத நிலையில் விராட் கோலி - டி வில்லியர்ஸ் சேர்ந்து ரன் எடுத்தனர். டி வில்லியர்ஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

2 பவுண்டரி

2 பவுண்டரி

விராட் கோலி அரைசதம் அடித்தார். 43 பந்துகளில் சரியாக 50 ரன்கள் எடுத்து கோலி ஆட்டமிழந்தார். அவர் தன் 50 ரன்களில் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் மட்டுமே அடித்து இருந்தார். மீதமுள்ள 40 ரன்களை ஓடியே எடுத்தார். இது ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஆகும்.

ரசிகர்கள் வியப்பு

ரசிகர்கள் வியப்பு

வேறு எந்த பேட்ஸ்மேனும் இந்த சாதனையை செய்ததில்லை. இப்படிக் கூட ஒரு சாதனை செய்ய முடியுமா? என ரசிகர்கள் வியந்தனர். இது மட்டுமின்றி கோலி 200 ஐபிஎல் சிக்ஸ் என்ற மைல்கல்லையும் இந்தப் போட்டியில் எட்டினார்.

மேலும் சாதனை

மேலும் சாதனை

அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி. இந்தப் போட்டியில் கோலி அரைசதம் அடித்த போதும்இத்தனை சாதனைகள் செய்த போதும், சிஎஸ்கே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 25, 2020, 23:29 [IST]
Other articles published on Oct 25, 2020
English summary
IPL 2020 RCB vs CSK : Virat Kohli hit 50 with less boundaries
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X