For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருப்பா அது? 8 பால் தான் ஆடினார்.. கதிகலங்கிய பஞ்சாப்.. ஒரே ஓவரில் மாறிய போட்டி.. தப்பித்த கோலி!

ஷார்ஜா : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் கோலியின் திட்டம் திசை மாறிப் போனது.

ஏபி டிவில்லியர்ஸ் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது வந்த கிறிஸ் மோரிஸ் கடைசி ஓவரில் கெட்ட ஆட்டம் போட்டு பஞ்சாப் அணியை பந்தாடினார்.

மோரிஸ் ஆட்டத்தால் விராட் கோலியின் தவறான திட்டத்தால் பெங்களூர் அணிக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.

என்ன இது? டி வில்லியர்ஸ்-ஐ ஓரங்கட்டிய கோலி.. பிளாப் ஆன திட்டம்.. பொங்கி எழுந்த ரசிகர்கள்!என்ன இது? டி வில்லியர்ஸ்-ஐ ஓரங்கட்டிய கோலி.. பிளாப் ஆன திட்டம்.. பொங்கி எழுந்த ரசிகர்கள்!

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

2௦20 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில், பெங்களூர் அணிக்கு எதிராக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி ஆடியது. பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

கை கொடுத்த கோலி

கை கொடுத்த கோலி

அந்த அணியின் துவக்க வீரர் ஆரோன் பின்ச் நிதான ஆட்டம் ஆடினார். படிக்கல் அதிரடி ஆட்டம் ஆடி 12 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்ச் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி நிலையாக ஆடி அணிக்கு கை கொடுத்தார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

வாஷிங்க்டன் சுந்தர், கோலி நிதானமாக ஆடியதால் ரன் ரேட் சரிந்தது. சுந்தர் 14 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஏபி டிவில்லியர்ஸ் இறங்குவார், ரன் ரேட் அதிரடியாக உயரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

சிவன் துபே ஐந்தாம் வரிசையில் இறங்கினார். இதை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. துபேவும் அதிரடி ஆட்டம் ஆடவில்லை. 19 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து அவர் ஆட்டமிழந்தார். அதன் பின் டிவில்லியர்ஸ் பேட்டிங் வரிசையில் ஆறாவதாக களமிறங்கினார்.

தள்ளாடிய ரன் ரேட்

தள்ளாடிய ரன் ரேட்

டிவில்லியர்ஸ் 2 ரன்களிலும், கோலி 48 ரன்களிலும் 18வது ஓவரில் ஆட்டமிழந்தனர். அப்போது பெங்களூர் அணியின் ரன் ரேட் 7.61 ஆக தள்ளாடிக் கொண்டு இருந்தது. 150 ரன்கள் தான் எடுக்கும் என்ற நிலையில் இருந்தது. ஷார்ஜாவில் 200 ரன்கள் கூட எளிதாக அடிக்க முடியும் என்பதால் இது மோசமான ஸ்கோராக இருக்கும்.

கிறிஸ் மோரிஸ் அதிரடி

கிறிஸ் மோரிஸ் அதிரடி

இந்த நிலையில், கிறிஸ் மோரிஸ் கடைசி ஓவரில் தெறிக்கவிட்டார். ஷமியின் கடைசி ஓவரில் 3 சிக்ஸ், 1 ஃபோர் அடித்து அசத்தினார், அந்த ஒரு ஓவரில் மட்டும் பெங்களூர் அணி 24 ரன்கள் குவித்தது. மோரிஸ் 8 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார்.

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் ஸ்கோர்

எட்டே பந்துகள் ஆடி பஞ்சாப் அணியை புரட்டி எடுத்தார் மோரிஸ். அவர் அதிரடியால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணிக்கு இது சவாலான இலக்காக அமைந்தது.

பஞ்சாப் பந்துவீச்சு

பஞ்சாப் பந்துவீச்சு

பஞ்சாப் அணியில் ஷமி அந்த கடைசி ஓவரால் அதிக ரன் கொடுத்த வீரராக மாறினார். 4 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்தார். ஷமி 2, முருகன் அஸ்வின் 2, அர்ஷ்தீப் சிங் 1, ஜோர்டான் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Story first published: Thursday, October 15, 2020, 22:31 [IST]
Other articles published on Oct 15, 2020
English summary
IPL 2020 RCB vs KXIP : RCB scored 171 with the help of Chris Morris
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X