For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன இது? டி வில்லியர்ஸ்-ஐ ஓரங்கட்டிய கோலி.. பிளாப் ஆன திட்டம்.. பொங்கி எழுந்த ரசிகர்கள்!

ஷார்ஜா : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் பேட்டிங் ஆர்டரை மாற்றினார் கேப்டன் விராட் கோலி.

ஏபி டிவில்லியர்ஸ் நல்ல பார்மில் இருக்கும் நிலையில் அவரை 16வது ஓவருக்கு பின் ஆட வைத்தார் கோலி.

அந்த திட்டம் பெரிய அளவில் தோல்வி அடைந்தது. இந்த முடிவை ரசிகர்கள் விரும்பவில்லை. டிவில்லியர்ஸ்-க்கு முன் அனுபவம் இல்லாத வீரர்கள் ஆடியதை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதும் ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதும் ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்!

பெங்களூர் - பஞ்சாப் போட்டி

பெங்களூர் - பஞ்சாப் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது.

ஷார்ஜா மைதானம்

ஷார்ஜா மைதானம்

இந்தப் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானத்தில் சிறிய பவுண்டரி எல்லை என்பதால் எளிதாக சிக்ஸ் அடிக்கலாம். அதே சமயம், அந்த ஆடுகளம் மந்தமாக மாறி விட்டதால் சேஸிங் செய்யும் அணிக்கு அது கடினமாக இருக்கும்.

பெங்களூர் பேட்டிங் எப்படி?

பெங்களூர் பேட்டிங் எப்படி?

இந்த நிலையில், பெங்களூர் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஆரோன் பின்ச் 20, படிக்கல் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி மூன்றாவதாக இறங்கினார். அடுத்து வந்த சுந்தர் 13 ரன்களில் வெளியேறினார்.

டிவில்லியர்ஸ் எங்கே?

டிவில்லியர்ஸ் எங்கே?

ஐந்தாவது பேட்ஸ்மேன் ஆக ஏபி டிவில்லியர்ஸ் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால், அவர் இறங்கவில்லை. இதை அடுத்து ரசிகர்கள் ஏபி வில்லியர்ஸ் எங்கே என கேள்வி எழுப்பத் துவங்கினர். சிலர் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா? என்ற கவலையும் கொண்டனர். ஆனால், அவருக்கு அப்படி எதுவும் நேரவில்லை.

சிவம் துபேவுக்கு வாய்ப்பு

சிவம் துபேவுக்கு வாய்ப்பு

டிவில்லியர்ஸ்க்கு பதில் சிவம் துபே ஐந்தாவது வீரராக களமிறங்கினார். அவர் அதிரடியாக ஆடுவார் என கோலி இந்த முடிவை எடுத்தார். ஆனால், அவர் 19 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பின்னரே ஏபி டிவில்லியர்ஸ் களமிறங்கினார்.

சொதப்பல் திட்டம்

சொதப்பல் திட்டம்

டிவில்லியர்ஸ் கடைசி 5 ஓவர்களில் பட்டையைக் கிளப்புவார் என காத்திருந்த நிலையில், அவர் 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் கோலியும் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கோலி போட்ட திட்டம் தோல்வி அடைந்தது.

மோரிஸ்

மோரிஸ்

கடைசி நேரத்தில் கிறிஸ் மோரிஸ் பெங்களூர் அணியை காப்பாற்றினார். 8 பந்துகளில் 25 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியை திணற வைத்தார். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.

Story first published: Thursday, October 15, 2020, 21:44 [IST]
Other articles published on Oct 15, 2020
English summary
IPL 2020 RCB vs KXIP : Virat Kohli changed AB de Villiers batting order. But, fans are not happy with the move.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X