பொல்லார்டுக்கே தண்ணி காட்டிய இளம் வீரர்.. பரபர சூப்பர் ஓவர்.. கோலி டீம் ஜெயித்தது இப்படித்தான்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் பத்தாவது போட்டியிலேயே இந்த சீசனின் இரண்டாவது சூப்பர் ஓவர் நடைபெற்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஆடிய போட்டி டை ஆனது. அதன் ப[பின் சூப்பர் ஓவர் நடைபெற்றது.

அந்த சூப்பர் ஓவரில் பெங்களூர் அணி அபாரமாக ஆடி வென்றது. அதற்கு முக்கிய காரணம், சூப்பர் ஓவரை வீசிய பெங்களூர் அணியின் இளம் இந்திய பந்துவீச்சாளர் தான்.

அடிச்சா இப்படி அடிக்கணும்.. நம்பர் 1 பவுலரை குறி வைத்த டிவில்லியர்ஸ்.. மிரண்டு போன ரோஹித்!

சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவர்

2020 ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியே டை ஆகி சூப்பர் ஓவர் வரை சென்றது. அந்தப் போட்டியில் டெல்லி அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அடுத்து இதே சீசனின் 10வது போட்டியும் டை ஆகி சூப்பர் ஓவர் வரை சென்றது.

பெங்களூர் - மும்பை

பெங்களூர் - மும்பை

பெங்களூர் - மும்பை அணிகள் மோதிய இந்தப் போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு தேவ்தத் படிக்கல் 54 ரன்கள் அடித்தும், ஆரோன் பின்ச் 52 ரன்கள் குவித்தும் சிறப்பான துவக்கம் அளித்தனர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

விராட் கோலி மோசமாக ஆடி 11 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தார் அடுத்து அதிரடி ஆட்டம் ஆடி டிவில்லியர்ஸ் 55, சிவம் துபே 27 ரன்கள் குவித்தனர்.பெங்களூர் அணி 201 ரன்களை எட்டியது பும்ரா 4 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்து இருந்தார்.

போட்டி டை ஆனது

போட்டி டை ஆனது

அடுத்து ஆடிய மும்பை அணியில் இஷான் கிஷன் 99, பொல்லார்டு 60 ரன்கள் எடுத்தனர். இவர்களில் இருவரும் கடைசி 4 ஓவர்களில் 80 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடி ஆட்டம் ஆடி அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். ஆனாலும், போட்டி டை ஆனது.

சைனி அபாரம்

சைனி அபாரம்

பெங்களூர் அணியில் இசுரு உடானா, நவ்தீப் சைனி மட்டுமே வேகப் பந்துவீச்சாளர்கள். எனவே, வேறு வழியின்றி 4 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்த சைனியிடம் பந்தை கொடுத்தார் கோலி. அவர் சிறப்பாக பந்துவீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

8 ரன்கள் இலக்கு

8 ரன்கள் இலக்கு

மும்பை அணியில் பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா என இரண்டு அதிரடி பேட்ஸ்மேன்கள் ஆடியும், சைனி பந்துவீச்சை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பொல்லார்டு ஒரு ஃபோர் மட்டுமே அடித்தார். 8 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடிய பெங்களூர் டி வில்லியர்ஸ் - கோலியுடன் களமிறங்கியது. பும்ரா பந்து வீசினார்.

கடைசி பந்தில் வெற்றி

கடைசி பந்தில் வெற்றி

பெங்களூர் அணி சற்று தடுமாறி முதல் இரண்டு பந்துகளில் 2 ரன்கள் எடுத்தது, 4வது பந்தில் டிவில்லியர்ஸ் ஃபோர் அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கோலி 4 அடித்தார். இந்த சீசனில் கோலி அடிக்கும் முதல் பவுண்டரி இதுதான்.

பொல்லார்டை தடுத்த சைனி

பொல்லார்டை தடுத்த சைனி

பொல்லார்டு இந்தப் போட்டியில் சூப்பர் ஓவருக்கு முன் 24 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து இருந்தார். 5 சிக்ஸ் அடித்து இருந்தார். ஆனால், அவரால் சைனி பந்துவீச்சில் ஒரு சிக்ஸ் கூட அடிக்க முடியவில்லை. நவ்தீப் சைனியால் மட்டுமே பெங்களூர் இந்தப் போட்டியை வென்றது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020 News in Tamil : RCB vs MI - Navdeep Saini won super over for RCB against Mumbai Indians.
Story first published: Tuesday, September 29, 2020, 0:39 [IST]
Other articles published on Sep 29, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X