இதுக்கு மேலயும் அவரை டீம்ல வைச்சுக்க முடியாது.. கழட்டி விட்ட கோலி வயதான வீரருக்கு நேர்ந்த கதி!

துபாய் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியிலும் தன் இடத்தை இழந்து தவித்து வரும் டேல் ஸ்டெய்ன், ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலும் வெளியே அமர வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகை தன் வேகப் பந்துவீச்சால் மிரட்டி பணிய வைத்த இவருக்கா இந்த நிலை? என ரசிகர்கள் பரிதாபப்பட்டு வருகின்றனர்.

RCB vs MI : மும்பை டாஸ் வெற்றி.. 3 பேரை டீமை விட்டு தூக்கிய கோலி.. அதிரடி மாற்றம்!

டேல் ஸ்டெய்ன்

டேல் ஸ்டெய்ன்

தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக வலம் வந்தார். அவரது பந்துவீச்சை கண்டு எதிரணிகள் மிரளும் நிலை இருந்தது.

காயம்

காயம்

அவர் உச்சத்தில் இருந்த போது தொடர்ந்து காயங்கள் ஏற்பட்டன. அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதில் இருந்து மீள அவருக்கு சில ஆண்டுகள் ஆனது. அந்த கால கட்டத்தில் டேல் ஸ்டெய்ன் தென்னாப்பிரிக்க அணியில் இனி ஆடவே மாட்டார் என்றே கருதப்பட்டது.

நீண்ட இடைவெளி

நீண்ட இடைவெளி

இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு வந்தார் டேல் ஸ்டெய்ன். தென்னாப்பிரிக்க அணியில் இணைந்து சில போட்டிகளில் ஆடிய அவர் ஐபிஎல் அணிகளில் இடம் தேடி வந்தார். இனி தான் தொடர்ந்து கிரிக்கெட் ஆடப் போவதாக கூறினார்.

பெங்களூர் அணி அடைக்கலம்

பெங்களூர் அணி அடைக்கலம்

கடந்த சீசனில் பெங்களூர் அணி அவருக்கு அடைக்கலம் அளித்தது. இரண்டு போட்டிகளில் ஆடிய அவர் காயம் ஏற்பட்டு உடனடியாக தென்னாப்பிரிக்கா திரும்பினார். மீண்டும் 2020 ஐபிஎல் தொடரில் அவரை அணியில் தேர்வு செய்தது பெங்களூர் அணி.

சொதப்பல் பந்துவீச்சு

சொதப்பல் பந்துவீச்சு

டேல் ஸ்டெய்ன் இந்த சீசனில் சொதப்பலாக பந்து வீசினார். ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 3.4 ஓவரில் 33 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது போட்டியில் இன்னும் மோசமாக 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் இன்றி 57 ரன்கள் கொடுத்தார்.

நீக்கிய கோலி

நீக்கிய கோலி

அவரது மோசமான பந்துவீச்சால் அதிருப்தியில் இருந்த கேப்டன் விராட் கோலி அவரோ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கினார். அவருக்கு பதில் மற்றொரு வெளிநாட்டு வீரரான ஆடம் ஜாம்பா அணியில் சேர்க்கப்பட்டார்.

பெங்களூர் நிலை

பெங்களூர் நிலை

பெங்களூர் அணி இந்த சீசனில் பிளே-ஆஃப் சென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த இரு சீசன்களில் அந்த அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இரு இடங்களில் தான் இடம் பெற்றது. இந்த சீசனிலும் அதே நிலை வந்தால் நிலைமை மோசமாகும் என்பதால் கோலி அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020 News in Tamil : Dale Steyn dropped from RCB. He already lost his place in South African team. Now, this could be the end of Steyn’s professional career.
Story first published: Monday, September 28, 2020, 20:33 [IST]
Other articles published on Sep 28, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X