For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது 7வது முறை.. இவர் வந்தாலே விராட் கோலி அவுட்.. தெறிக்கவிட்ட ஹைதராபாத் வீரர்!

ஷார்ஜா : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சந்தீப் சர்மா அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

அவரது பந்துவீச்சில் விராட் கோலி ஆட்டமிழந்தார். ஐபிஎல் போட்டிகளில் கோலி விக்கெட்டை சந்தீப் சர்மா வீழ்த்துவது ஏழாவது முறையாகும்.

சந்தீப் சர்மா வந்தாலே கோலி விக்கெட் வீழ்ந்து விடும் என கூறும் அளவுக்கு சாதனை புரிந்துள்ளார் சந்தீப் சர்மா.

பெங்களூர் அணி பேட்டிங்

பெங்களூர் அணி பேட்டிங்

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்டிங் சொதப்பலாக இருந்தது. ஜோஷ் பிலிப் 32, டிவில்லியர்ஸ் 24, வாஷிங்க்டன் சுந்தர் 21 ரன்கள் எடுத்து அந்த அணியை 100 ரன்களை கடக்க உதவினர்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. சந்தீப் சர்மா 2, ஜேசன் ஹோல்டர் 2, நடராஜன் 1, ஷாபாஸ் நதீம் 1, ரஷித் கான் 1 விக்கெட் வீழ்த்தினர். சந்தீப் சர்மா பவர்பிளே ஓவர்களில் தேவ்தத் படிக்கல், விராட் கோலி என இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

விராட் கோலி விக்கெட்

விராட் கோலி விக்கெட்

விராட் கோலி இந்தப் போட்டியில் 7 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். சந்தீப் சர்மா வீசிய அவுட் ஸ்விங் பந்தை அடித்த கோலி, கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கோலி கடந்த போட்டி போலவே இந்த முறையும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

ஏழாவது முறை

ஏழாவது முறை

சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஏழாவது முறையாக ஆட்டமிழந்தார் கோலி. 12 இன்னிங்க்ஸ்களில் 7 முறை கோலி விக்கெட்டை சாய்த்துள்ளார் சந்தீப் சர்மா. கோலி அவரது பந்துவீச்சில் 68 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதன் ஸ்ட்ரைக் ரேட் 139 ஆகும்.

தோனி - ஜாகிர் கான்

தோனி - ஜாகிர் கான்

ஐபிஎல் தொடரில் ஏழு முறை ஒரு பேட்ஸ்மேனை ஒரு பவுலர் வீழ்த்துவது இரண்டாவது முறையாகும். முன்னதாக ஜாகிர் கான் பந்துவீச்சில் தோனி ஏழு முறை ஆட்டமிழந்து இருக்கிறார். அதன் பின் இரண்டே இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார் சந்தீப் சர்மாவிடம் கோலி ஏழு முறை ஆட்டமிழந்து இருக்கிறார்.

ஹைதராபாத் வெற்றி

ஹைதராபாத் வெற்றி

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 14.1 ஓவரில் ஹைதராபாத் அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் அந்த அணி புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியது.

Story first published: Saturday, October 31, 2020, 23:24 [IST]
Other articles published on Oct 31, 2020
English summary
IPL 2020 RCB vs SRH : Sandeep Sharma dismissed Virat Kohli for the seventh time in IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X