For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த வயதான வீரர் பார்ம் அவுட்.. அணியை விட்டு நீக்க மறுத்த தோனி.. அதன் பின் நடந்த தரமான சம்பவம்!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் நான்கு போட்டிகளில் சுத்தமாக பார்ம் அவுட்டில் இருந்த ஷேன் வாட்சனை தோனி தொடர்ந்து ஆதரித்து வந்தார்.

கடந்த சீசன்களில் வாட்சன் முதல் சில போட்டிகளில் மோசமாக ஆடி விட்டு பின் கடைசி நேரத்தில் தான் பார்முக்கு வந்தார்.

இந்த முறை சிஎஸ்கே அவருக்கு இடம் அளிக்கும் நிலையில் இல்லை. ஆனாலும், தோனி, ஷேன் வாட்சனை தொடர்ந்து ஆதரிக்க வேறு ஒரு காரணம் இருந்தது. அதே காரணத்தால் அடுத்த போட்டியில் தரமான சம்பவத்தை செய்தார் வாட்சன்.

தோனி சிங்கம் போன்றவர்... அவர தடுத்து நிறுத்துறது ரொம்ப கஷ்டம்... பிரெட் லீதோனி சிங்கம் போன்றவர்... அவர தடுத்து நிறுத்துறது ரொம்ப கஷ்டம்... பிரெட் லீ

சிஎஸ்கே நிலை

சிஎஸ்கே நிலை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரில் மோசமான தோல்விகளை பெற்றது. முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்தது. அந்த அணியில் சரியான 11 வீரர்களை தேர்வு செய்வதில் முதலில் குழப்பம் இருந்தது.

மோசமான துவக்கம்

மோசமான துவக்கம்

தோல்விகளுக்கு முதல் காரணம் அணியின் துவக்க வீரர்கள் தான். முரளி விஜய் பேட்டிங் செய்யவே திணறினார். டெஸ்ட் போட்டி போலவே நிதான ஆட்டம் ஆடி ஆட்டமிழந்து வந்தார். வாட்சன் சில ஓவர்கள் சென்ற பின்னரே அதிரடி ஆட்டம் ஆடுவார். ஆனால், அவர் இந்த முறை அவரும் சொதப்பினார்.

முரளி விஜய் நீக்கம்

முரளி விஜய் நீக்கம்

தோல்விகளுக்கு முதல் காரணம் அணியின் துவக்க வீரர்கள் தான். முரளி விஜய் பேட்டிங் செய்யவே திணறினார். டெஸ்ட் போட்டி போலவே நிதான ஆட்டம் ஆடி ஆட்டமிழந்து வந்தார். வாட்சன் சில ஓவர்கள் சென்ற பின்னரே அதிரடி ஆட்டம் ஆடுவார். ஆனால், அவர் இந்த முறை அவரும் சொதப்பினார்.

வாட்சன் மோசமான நிலை

வாட்சன் மோசமான நிலை

நான்காவது போட்டியிலும் ஷேன் வாட்சன் ஏமாற்றினார். முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஷேன் வாட்சன் 52 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். முரளி விஜய் போல அவரையும் நீக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்தது.

ஐந்தாவது போட்டி

ஐந்தாவது போட்டி

இந்த நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் ஷேன் வாட்சன் - பாப் டுபிளெசிஸ் மீண்டும் துவக்கம் அளித்தனர். அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் ஆடி 178 ரன்கள் எடுத்த நிலையில் அதை சிஎஸ்கே சேஸிங் செய்தது.

தெறிக்கவிட்ட வாட்சன்

தெறிக்கவிட்ட வாட்சன்

சிஎஸ்கே அணி பெரிய இலக்கை எப்படி சேஸிங் செய்து முடிக்கப் போகிறது? என ரசிகர்கள் கவலையுடன் இருந்த நிலையில் வாட்சன் - டுபிளெசிஸ் ஜோடி கடைசி வரை விக்கெட் இழக்காமல் நின்று சேஸிங்கை வெற்றிகரமாக முடித்தது. வாட்சன் 83 ரன்கள் குவித்து இருந்தார்.

ஏன் தோனி நீக்கவில்லை?

ஏன் தோனி நீக்கவில்லை?

வாட்சனை ஏன் தோனி ஐந்தாவது போட்டியில் நீக்கவில்லை? அதற்கு ஒரு காரணம் வைத்திருந்தார் தோனி. முரளி விஜய் பேட்டிங் செய்ய திணறினார். வலைப் பயிற்சியில் கூட தவறுகள் செய்தார். ஆனால், வாட்சன் வலைப் பயிற்சியில் சிறப்பாகவே செயல்பட்டார். போட்டியில் தான் சில ஷாட்களை அடிக்க முயலும் போது விக்கெட்டை இழந்து வந்தார்.

பிளெம்மிங் என்ன சொன்னார்?

பிளெம்மிங் என்ன சொன்னார்?

இது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறுகையில், ஷேன் வாட்சன் வலைப் பயிற்சியில் தவறு செய்யவில்லை. அவர் அதிலும் தவறுகள் செய்திருந்தால் எங்களுக்கு அணித் தேர்வில் பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கும் என்றார்.

கடந்த சீசன்களில்..

கடந்த சீசன்களில்..

கடந்த சீசன்களிலும் ஷேன் வாட்சன் லீக் சுற்றில் சுமாராகவே ஆடி இருந்தார். ஆனால், பிளே-ஆஃப், இறுதிப் போட்டிகளில் அவர் தனி ஆளாக ஆடி அசத்தி இருந்தார். இந்த முறை சிஎஸ்கே மோசமான தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், சற்று முன்னதாக ஐந்தாவது லீக் போட்டியிலேயே பார்முக்கு திரும்பி உள்ளார்.

அடுத்த போட்டி

அடுத்த போட்டி

சிஎஸ்கே அணி அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்க உள்ளது. அந்தப் போட்டியில் வாட்சன் எப்படி ஆடப் போகிறார்? என ரசிகர்கள் இப்போதே ஆவலாக உள்ளனர். வாட்சன் போலவே சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் அடுத்து வரும் போட்டிகளில் தங்கள் பார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Story first published: Tuesday, October 6, 2020, 19:33 [IST]
Other articles published on Oct 6, 2020
English summary
IPL 2020 - CSK News : Reason behind Dhoni backed Shane Watson
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X