For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அது நடந்து விடுமோ? ஐபிஎல் 2ம் பாதியில் எதிர்பாராத டிவிஸ்ட்.. அசர வைக்கும் ஒரு டீம்.. 4 அணிகள் காலி!

துபாய்: 2020 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. தொடரின் முதல் பாதியை போல இல்லாமல் இரண்டாம் பாதியில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது.

2020 ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டெல்லி மற்றும் மும்பை அணிகள் இந்த தொடரில் மிக முக்கியமான அணிகளாக உருவெடுத்து உள்ளது.

இரண்டு அணிகளும் அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. இந்த இரண்டு அணிகளுமே பிளே ஆப் செல்வது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

உறுதி எப்படி

உறுதி எப்படி

இன்னொரு பக்கம் பெங்களூர் அணியும் புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள பெங்களூர் 6 போட்டிகளில் வென்றுள்ளது. இன்னும் 2 போட்டிகளில் வென்றால் பெங்களூர் அணி பிளே ஆப் சென்றுவிடும். பெங்களூர் அணி பிளே ஆப் செல்வது ஏறத்தாழ இந்த முறை உறுதியாகிவிட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த நிலையில் கொல்கத்தா அல்லது ஹைதாராபாத் அணிதான் புள்ளிகள் பட்டியலில் 4ம் இடம் பிடிக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர் . கொல்கத்தா அணி இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 9 போட்டிகளில் ஆடி இதுவரை 5 போட்டிகளில் வென்று மிகவும் வலிமையாக இருக்கிறது. அதேபோல் ஹைதராபாத் அணியும் தொடக்கத்தில் 3 போட்டிகளில் வென்று புள்ளிகள் பட்டியலில் 5ம் இடத்தில் இருந்தது.

டிவிஸ்ட்

டிவிஸ்ட்

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் புதிய திருப்பமாக இரண்டு அணிகளும் பின்னுக்கு செல்ல தொடங்கி உள்ளது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் தற்போது அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வேகமாக முன்னேறி வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து பஞ்சாப் அணி வேகமாக புள்ளிகள் பட்டியலில் முன்னேறி வருகிறது.

எப்படி

எப்படி

அதிலும் புள்ளிகள் பட்டியலில் டாப் இடங்களில் இருக்கும் அணிகளை எல்லாம் பஞ்சாப் வரிசையாக வீழ்த்தி வருகிறது. பெங்களூர், மும்பை, டெல்லி என்று புள்ளிகள் பட்டியலில் இருக்கும் முதல் மூன்று அணிகளை வீழ்த்தி பஞ்சாப் வேகமாக முன்னேறி உள்ளது. இதனால் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் தற்போது 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

கெயில்

கெயில்

கெயில் வந்த பின் அனைத்து போட்டியிலும் பஞ்சாப் வென்றுவிட்டது.10 போட்டிகளில் பஞ்சாப் 4ல் வென்றுள்ளது. மீதம் இருக்கும் 4 போட்டியிலும் வென்றால் பஞ்சாப் எளிதாக பிளே ஆப் செல்ல முடியும். இனி பஞ்சாப் அணி ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இதில் பஞ்சாப் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால், பஞ்சாப் பிளே ஆப் செல்ல வாய்ப்பு வந்துள்ளது.

திருப்பம்

திருப்பம்

பஞ்சாப் அணிதான் ஐபிஎல் தொடரில் முதலில் வெளியேறும் அணி என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே பஞ்சாப் அணி தற்போது பிளே ஆப் ரேஸில் வந்துள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரில் மும்பையை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கிய சிஎஸ்கே புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது.

Story first published: Wednesday, October 21, 2020, 9:15 [IST]
Other articles published on Oct 21, 2020
English summary
IPL 2020: Rise of Rahul, Punjab gets a chance to make it into playoffs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X