
ஆடவில்லை
அதிலும் ஷ்ரேயாஸ் ஐயர், பண்ட் மிக மோசமாக பேட்டிங் செய்து வருகிறார்கள். தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய இரண்டு பேருமே தற்போது மிக மோசமாக திணறி வருகிறார்கள். டெல்லி அணியின் முன்னணி வீரர் ரிஷாப் பண்ட் இந்த சீசனில் சரியாக ஆட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார். தற்போது களத்தில் ரிஷாப் பண்ட் ஆடும் விதம் பெரிய அளவில் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

சந்தேகம்
முன்பெல்லாம் மைதானத்தில் ரிஷாப் பண்ட் நின்றால் டென்சன் இல்லாமல் இருப்பார். யாருமே யோசித்து பார்க்க முடியாத ஷாட்களை அடிப்பார். பும்ரா, ஷமி பந்துகளில் கூட ரிஸ்கி ஷாட் அடித்து சிக்ஸ் பறக்க விடுவார். ஏ பிடி வில்லியர்ஸ் போல அசால்ட்டாக சிக்ஸ் அடிப்பார். ஆனால் எனோ இப்போது ரிஷாப் பண்ட் அப்படி ஆடுவது இல்லை.

பேட்டிங்
அதிலும் இப்போதெல்லாம் அவரால் பந்து எப்படி வருகிறது என்பதையே கணிக்க முடியவில்லை. சரியான பொஷிஷனில் நிற்கவில்லை. பந்தின் வேகத்தை கணித்து பந்தை பார்த்து அடிக்க முடியவில்லை. இவருக்கு என்னதான் ஆனது என்று பலரும் கேட்கும் அளவிற்கு ரிஷாப் பண்ட் ஆடி வருகிறார்.

நிலை என்ன
அதிலும் நேற்று ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் இவர் பந்தை கணிக்க முடியாமல் திணறினார். பேட்டை தேவையில்லாமல் சுற்றி மைதானத்தில் மோசமாக தடவினார். இவரை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. ஒரு காலத்தில் எப்படி ஆடிய வீரர் இவர் என்று இணையத்தில் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இவர் உடனே தனது பேட்டிங்கை ஸ்டைலை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

பழைய ஸ்டைல்
இவர் தன்னுடைய பழைய பேட்டிங் ஸ்டைலை மறந்துவிட்டார். அந்த பழைய ஆக்ரோஷம் இவரின் ஆட்டத்தில் இப்போதெல்லாம் இல்லை.இவரை அடுத்த தோனி என்று கூறி பிரஷர் ஏற்றிவிட்டனர். இதனால் ஏற்பட்ட பொறுப்பு காரணமாக தற்போது திணறுகிறார். இவர் சுயமாக ஆடினால் நன்றாக ஆடுவார் என்று பலர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

பரிதாபம்
அதிலும் நேற்று இவர் ஆடிய விதம் எல்லாம் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஒரு காலத்தில் பும்ராவையே சிக்ஸர்கள் மூலம் துவைத்தவர் பண்ட். கண்டிப்பாக இவருக்கும் ஷ்ரேயாஸ் ஐயருக்கும் சொல்ல முடியாத பிரஷர் இருக்கும். அதனால்தான் இருவரும் திணறுகிறார்கள். உடனே இவர்கள் பிரஷரை மறந்து நிம்மதியாக ஆட வேண்டும், என்று பலர் இணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.