இந்த உடம்பை வச்சுக்கிட்டு.. நீங்கதான் தோனிக்கு மாற்றா?.. பண்டிற்கு செக் வைத்த பிசிசிஐ.. பரபர காரணம்!

துபாய்: இந்திய அணியில் தோனியின் இடத்தை பிடிக்க தீவிரமாக முயன்று வரும் ரிஷாப் பண்டிற்கு பிசிசிஐ தேர்வு குழு புதிய செக் வைத்து இருக்கிறது.

2020 ஐபிஎல் தொடரில் டெல்லி, மும்பை உள்ளிட்ட அணிகள் சிறப்பாக ஆடி வருகிறது. தொடக்கத்தில் வரிசையாக அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்ற டெல்லி அணி தற்போது அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருகிறது.

புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த டெல்லி அணி தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ளது. அதிலும் டெல்லி அணியில் நம்பிக்கை அளித்த ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், ப்ரித்வி ஷா என்று யாருமே இப்போது சரியாக ஆடுவது இல்லை.

ஆடுவது இல்லை

ஆடுவது இல்லை

அதிலும் டெல்லி அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பண்ட் இந்த முறை சரியாக ஆடவில்லை . தொடக்கத்தில் சில போட்டிகளில் இவர் நன்றாக பேட்டிங் செய்தார். ஆனால் அதன்பின் எந்த போட்டியிலும் இவர் ஆடவில்லை. மோசமான ஷாட்களை ஆடி அவுட்டானார்.

எப்படி

எப்படி

இதெல்லாம் போக இடையில் ரிஷாப் பண்ட் காலில் வேறு காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக அவர் மோசமாக அவதிப்பட்டார். இதனால் இரண்டு போட்டிகளில் ரிஷாப் பண்ட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. காயத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷாப் பண்ட் வேகமாக ஓட முடியாத நிலை இருந்தது.

பிட்னஸ்

பிட்னஸ்

இவரின் உடல் வாகு காரணமாக வேகமாக ஓட முடியாமல் ரிஷாப் பண்ட் கஷ்டப்படடார். ஆனாலும் அவர் டெல்லி அணிக்குள் எடுக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் தற்போது இந்திய அணியில் தேர்வாக வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இவர் இடம்பெற வாய்ப்பு இல்லை என்று தகவல் வருகிறது.

காரணம்

காரணம்

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் மாதம் நடக்க உள்ள கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ள இந்திய அணி தயாராகி வருகிறது. இதற்கான வீரர்களை தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் அணியில் ரிஷாப் பண்ட்டிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகிறத. இதற்கு முக்கியமான காரணம் உள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

ரிஷாப் பண்ட் உடல் எடையை சோதனை செய்ததில் அவர் மிகவும் குண்டாக இருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரின் எடை அதிகமாக இருக்கிறது. இதனால் அவரை அணியில் எடுக்க வேண்டாம் என்று பிசிசிஐ நினைக்கிறது. இவரை குறித்து ரிப்போர்ட் அளிக்கும்படி பிசிசிஐ இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவிடம் கேட்டுள்ளது.

எடை

எடை

அவரின் எடை அதிகரிக்க என்ன காரணம், அவரின் பிட்னஸ் எப்படி இருக்கிறது என்பதை குறித்து கேள்வி எழுப்பி பிசிசிஐ இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவிற்கு கடிதம் அனுப்பி உள்ளது. இவர்களின் பதிலை பொறுத்து ரிஷாப் பண்ட் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் ரிஷாப் பண்ட் ஆஸ்திரேலிய சீசனில் ஆட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கக்ள். அடுத்த தோனியாக ஆசைப்பட்டவர்.. தன்னுடைய பிட்னஸையே கவனிக்காமல் போனதை இணையத்தில் பலரும் கிண்டல் செய்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: Rishabh Pant may not play in Team India for the Aussie series due to overweight.
Story first published: Monday, October 26, 2020, 11:52 [IST]
Other articles published on Oct 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X