For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்கு அப்புறம் இவர் தான் பெஸ்ட் கேப்டன்.. புகழ்ந்து தள்ளிய சேவாக்!

துபாய் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்ற நிலையில், ரோஹித் சர்மாவை புகழ்ந்து தள்ளி உள்ளார் வீரேந்தர் சேவாக்.

தோனிக்கு பின் சிறந்த கேப்டன் ரோஹித் சர்மா தான் என சேவாக் அவரை பாராட்டி உள்ளார்.

போட்டியில் ரோஹித் செய்த குறிப்பிட்ட சில மாற்றங்களை சுட்டிக் காட்டி பாராட்டி உள்ளார்.

135..140..147.. முதல் போட்டியிலேயே அதிரவைத்த சிஎஸ்கே ஜோஷ்.. 6.4 அடிக்கு ஓடி வந்த பவுலிங் பாகுபலி!135..140..147.. முதல் போட்டியிலேயே அதிரவைத்த சிஎஸ்கே ஜோஷ்.. 6.4 அடிக்கு ஓடி வந்த பவுலிங் பாகுபலி!

மும்பை - கொல்கத்தா

மும்பை - கொல்கத்தா

2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே ஆன லீக் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 195 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பாராட்டிய சேவாக்

பாராட்டிய சேவாக்

அந்தப் போட்டியில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை பாராட்டிய சேவாக், ஐபிஎல் தொடரில் தோனிக்கு பின் ரோஹித் சர்மா தான் சிறந்த கேப்டன் என நான் எப்போதுமே சொல்லி வருகிறேன். அவர் இந்த ஆட்டத்தை புரிந்து கொண்டுள்ளது, மாற்றம் செய்வது எல்லாமே மிக சிறப்பாக உள்ளது என்றார்.

மாற்றம்

மாற்றம்

அந்தப் போட்டியில் கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக் - நிதிஷ் ராணா கூட்டணி அமைத்து ரன் குவித்த போது க்ருனால் பாண்டியாவை பயன்படுத்தாமல், கீரான் பொல்லார்டை பயன்படுத்தி அவர்களை பிரித்ததை குறிப்பிட்டு பாராட்டி உள்ளார் சேவாக்.

தோனி போல..

தோனி போல..

அதிலும், நிதிஷ் ராணா நிலைத்து நின்று ஆடிய பின் பொல்லார்டை அழைக்காமல், அதற்கு முன்பே அவரை பந்து வீச வைத்து ரன்களை கட்டுப்படுத்தினார் ரோஹித் சர்மா எனக் கூறி புகழ்ந்தார் சேவாக். முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவும் ரோஹித் சர்மாவை தோனி போல கேப்டன்சி செய்வதாக பாராட்டி உள்ளார்.

Story first published: Friday, September 25, 2020, 21:44 [IST]
Other articles published on Sep 25, 2020
English summary
IPL 2020 : Rohit Sharma is best IPL captain after Dhoni says Virender Sehwag.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X