மாற்றி மாற்றி வீடியோ வெளியிட்டு கலாய்த்துக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டன் மற்றும் பௌலர்

துபாய் : ஐபிஎல் போட்டிகள் நாளை மறுதினம் அபுதாபியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கிடையிலான முதல் போட்டியுடன் துவங்கவுள்ளது.

இந்த போட்டிக்காக இரு அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்த தொடருக்காக ஐபிஎல் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சர் டிரீம்11 தன்னுடைய பிரசார வீடியோக்களை வெளியிட்டுள்ளது. இதை தங்களது டிவிட்டர் பக்கத்தில் ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் பகிர்ந்துள்ளனர்

தோனி, கோலி, ரோகித் கிட்டஇருந்து கத்துக்கிட்டு என்னோட பேட்டிங்ல பிரயோகிக்கிறேன்.. ஸ்ரேயாஸ் ஐயர்

நாளை மறுதினம் துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல்லில் டைட்டில் ஸ்பான்சர் தனது பிரசார வீடியோக்களை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோக்களை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தங்களது டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

ரோகித் சர்மா வெளியிட்டுள்ள வீடியோவில், ஜஸ்பிரீத் பும்ரா சிறுவர்களுடன் சாலையில் கிரிக்கெட்டை விளையாடுகிறார். அவர் ஸ்லோ பால் போட்டதற்காக பாதியிலேயே விலக்கப்படுகிறார்.

இதேபோல, பதிலுக்கு பும்ரா வெளியிட்ட வீடியோவில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க விரும்பும் ரோகித் சர்மாவையும் சிறுவர்கள் தள்ளி வைத்துவிட்டு அவர்கள் ஆடுகிறார்கள். இந்த இரு வீடியோக்களும் வேடிக்கையாக ரசிகர்கள் விரும்பும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
The fans had a good laugh as the duo shared a fun banter over their 'gully cricket’ skills
Story first published: Thursday, September 17, 2020, 9:26 [IST]
Other articles published on Sep 17, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X