For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எதிர்காலமே காலியாகிவிடும்.. இப்போதுதான் கவனம் தேவை.. ரோஹித் சர்மாவை எச்சரிக்கும் வல்லுனர்கள்!

துபாய்: காலில் இருக்கும் காயத்தோடு மும்பை கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருவது பெரிய சர்ச்சையாகி உள்ளது .

இந்தியா ஆஸ்திரேலியா இடையே வரும் டிசம்பர் மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல்லிற்கு பிறகு நடக்க உள்ள இந்த தொடர் இரண்டு அணிகளுக்கும் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையில் ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இந்த முறை ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மருத்துவ குழுவின் அறிவுரையின் படி இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவரின் தொடை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்பதால் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

காயம்

காயம்

இந்த நிலையில் காலில் இருக்கும் காயத்தோடு மும்பை கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்திய அணிக்கு எப்படியாவது தேர்வாக வேண்டும் என்பதில் ரோஹித் சர்மா உறுதியாக இருக்கிறார். இதனால் காலில் இருக்கும் காயத்தை கூட பொருட்படுத்தாமல் ரோஹித் சர்மா ஆடி வருகிறார்.

தவறு

தவறு

ரோஹித் சர்மா இப்படி ஆறாத காயத்தோடு களத்திற்கு வருவது தவறு என்று கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக இணையத்தில் கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி உட்பட பலர்.. ரோஹித் சர்மா இப்போது களத்திற்கு வருவது தவறு. அவருக்கு இன்னும் காயம் சரியாக வில்லை. அப்படி இருக்கும் போது அவர் பேட்டிங் செய்தால்.. அது இன்னும் காயத்தை பெரிதாக்கும்.

எதிர்காலம்

எதிர்காலம்

காயம் இதனால் ஆறாமல் போக வாய்ப்புள்ளது. அவரின் பிட்னஸ் இதனால் பெரிதாக பாதிக்க வாய்ப்புள்ளது. ஏன் அவரின் கிரிக்கெட் எதிர்காலமே இதனால் பாதிக்க கூடும். ஸ்டெயின் இப்படித்தான் காயத்தோடு ஆடி மொத்தமாக கிரிக்கெட் எதிர்காலத்தை கெடுத்துக்கொண்டார்.

தேவையில்லை

தேவையில்லை

ஸ்டெயின் போதிய ஓய்வு எடுக்காமல் காயத்தோடு களமிறங்கி இப்போது அவரின் எதிர்காலமே காலியாகிவிட்டது. அதை ரோஹித் சர்மாவும் செய்ய கூடாது. தனது காயம் ஆறுவதற்கான கால அவகாசத்தை கொடுக்க வேண்டும், இப்படி அவசர பட கூடாது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Story first published: Sunday, November 8, 2020, 11:53 [IST]
Other articles published on Nov 8, 2020
English summary
IPL 2020: Rohit Sharma should not play games without full fitness
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X