For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர்கள் சிஎஸ்கேவிற்கு செய்ததை எங்களுக்கு யாரும் செய்யவில்லை.. ரோஹித் பகீர் குற்றச்சாட்டு.. பின்னணி!

அபுதாபி: நேற்று சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவிய பின்பும், மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தோல்விக்கான காரணங்களை பட்டியலிட்டார்.

முதல் ஐபிஎல் போட்டியையே மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் தோல்வியுடன் தொடங்கி உள்ளது. கடந்த 8 ஐபிஎல் தொடர்களில் வரிசையாக அனைத்து போட்டிகளிலும் மும்பை அணி முதல் போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது.

நேற்று நடந்த போட்டியில் மும்பை சென்னைக்கு எதிராக 162 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் அதன்பின் அதிரடியாக ஆடிய சென்னை அணி 165 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

தோனியோட புகழ் சச்சின், கோலியை தாண்டி வேற லெவல்ல இருக்கு.. கவாஸ்கர் பெருமிதம் தோனியோட புகழ் சச்சின், கோலியை தாண்டி வேற லெவல்ல இருக்கு.. கவாஸ்கர் பெருமிதம்

காரணம்

காரணம்

நேற்று சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவிய பின்பும், மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தோல்விக்கான காரணங்களை பட்டியலிட்டார். அவர் தனது பேட்டியில், எங்கள் பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. அணியை யாரும் வழி நடத்தி செல்லவில்லை. மும்பை அணியின் வீரர்கள் டு பிளசிஸ், ராயுடு போல ஆடவில்லை.

எங்களுக்கு செய்யவில்லை

எங்களுக்கு செய்யவில்லை

அவர்கள் சிஎஸ்கேவிற்கு செய்ததை எங்களுக்கு யாரும் செய்யவில்லை. எங்கள் பேட்ஸ்மேன்கள் அதை தவற விட்டு விட்டனர். நாங்கள் 10 ஓவருக்கு 85 ரன்கள் எடுத்தோம். அவ்வளவு வலிமையாக இருந்தோம். ஆனால் சிஎஸ்கே பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள். கடைசி நேரத்தில் மிக சிறப்பாக அவர்கள் பவுலிங் செய்தனர். அவர்களிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

கற்றுக்கொள்ள வேண்டும்

கற்றுக்கொள்ள வேண்டும்

இது தொடக்க நாட்கள்தான். இனி மும்பை திரும்பி வர வேண்டும். விரைவில் நாங்கள் திரும்பி வருவோம். இன்னும் நாட்கள் இருக்கிறது. தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து முன்னேறி செல்ல வேண்டும். இந்த போட்டியில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டோம்.

அடுத்த போட்டி தவறுகள்

அடுத்த போட்டி தவறுகள்

அடுத்த போட்டியில் நாங்கள் தவறுகளை சரி செய்வோம். நாங்கள் சில விஷயங்களை மாற்ற வேண்டும். சில யுக்தியை மாற்ற வேண்டும். அதோடு முக்கியமாக, இந்த பிட்சிற்கு ஏற்றபடி எங்களை நாங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த வானிலைக்கு எங்களை நாங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வானிலை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

போட்டி மாறுகிறது

போட்டி மாறுகிறது

அதுவும் கூட்டம் இல்லாமல் போட்டி நடப்பது வித்தியாசமாக இருக்கிறது. மைதானத்தில் ஆட்கள் இல்லை. இதற்கும் பழக வேண்டும். இனி இப்படித்தான் இருக்கும். இதை நாங்கள் பழகிக் கொள்ள வேண்டும். எல்லாம் விரைவில் சரியாகும் என்று நம்புகிறோம் என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டு உள்ளார்.

Story first published: Sunday, September 20, 2020, 12:30 [IST]
Other articles published on Sep 20, 2020
English summary
IPL 2020: Rohit talks about the reasons for MI team loss against CSK yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X