For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்படியும் தோல்வி தான்.. இருந்தாலும் தனி ஆளாக போராடி.. மானத்தை காப்பற்றிய டாம்!

துபாய் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை தாண்டுமா? என்பதே சந்தேகமாக இருந்தது.

அப்போது ஏழாவது பேட்ஸ்மேனாக இறங்கி அரைசதம் அடித்து மானத்தை காப்பாற்றினார் டாம் கர்ரன்.

3 உள்ளூர் வீரர்களை வைத்து ராஜஸ்தானை வீழ்த்திய தினேஷ் கார்த்திக்.. தரமான சம்பவம்!3 உள்ளூர் வீரர்களை வைத்து ராஜஸ்தானை வீழ்த்திய தினேஷ் கார்த்திக்.. தரமான சம்பவம்!

சவாலான இலக்கு

சவாலான இலக்கு

2020 ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 174 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் விக்கெட்கள் வேகமாக சரிந்தன. ஸ்டீவ் ஸ்மித் 3, சஞ்சு சாம்சன் 8, பட்லர் 21, உத்தப்பா 2, ரியான் பராக் 1, திவாதியா 14, கோபால் 5, ஆர்ச்சர் 6, உனட்கட் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டை இழந்தனர்.

டாம் கர்ரன் அபார ஆட்டம்

டாம் கர்ரன் அபார ஆட்டம்

ஆனாலும், டாம் கர்ரன் அபார ஆட்டம் ஆடி அரைசதம் கடந்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் 36 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். 2 ஃபோர், 3 சிக்ஸ் அடித்தார். அவரது ஆட்டத்தால் 88 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த ராஜஸ்தான் 137 ரன்களை எட்டியது.

தோல்வி தான்..

தோல்வி தான்..

ராஜஸ்தான் அணி 88 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த போதே தோல்வி உறுதியானது. எனினும், அணியை 100 கடக்கச் செய்ய போராடினார் டாம் கர்ரன். கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டமும் ஆடி அசத்தினார். ராஜஸ்தான் அணி தன் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

Story first published: Thursday, October 1, 2020, 0:06 [IST]
Other articles published on Oct 1, 2020
English summary
IPL 2020 News in Tamil : RR vs KKR - Tom Curran scored 54 runs in an lonely innings
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X