For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

45 பந்தில் 100 ரன்.. கோலி, சேவாக் ரெக்கார்டை உடைத்தார்.. ஐபிஎல்-ஐ தெறிக்கவிட்ட மயங்க் அகர்வால்

ஷார்ஜா : 2020 ஐபிஎல் களத்தை தன் சாதனை சதம் மூலம் தெறிக்கவிட்டுள்ளார் மயங்க் அகர்வால்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது.

அந்தப் போட்டியில் மயங்க் அகர்வால் அதிரடி ஆட்டம் ஆடி, சிக்ஸ் மழை பொழிந்து 45 பந்தில் சதம் அடித்து முக்கிய ரெக்கார்டை உடைத்துள்ளார்.

இமாலய ஸ்கோர்.. பேட்டிங் ஆட சொன்ன ராஜஸ்தான் அணியை புரட்டி எடுத்த மயங்க், ராகுல்.. செம டி20!இமாலய ஸ்கோர்.. பேட்டிங் ஆட சொன்ன ராஜஸ்தான் அணியை புரட்டி எடுத்த மயங்க், ராகுல்.. செம டி20!

ராஜஸ்தான் - பஞ்சாப் போட்டி

ராஜஸ்தான் - பஞ்சாப் போட்டி

2௦20 ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானம் சிறியது என்பதால் எளிதாக சிக்ஸ் அடிக்கலாம். அதனால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ராஜஸ்தான் தவறு

ராஜஸ்தான் தவறு

ஆனால், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்து பெரிய தவறு செய்தார். பஞ்சாப் அணி கிறிஸ் கெயிலை இந்தப் போட்டியிலும் களமிறக்கவில்லை. ஏற்கனவே சிறப்பாக ஆடி வரும் துவக்க வீரர்கள் கேஎல் ராகுல் - மயங்க் அகர்வால் மீண்டும் துவக்கம் அளித்தனர்.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

இருவரும் அதிரடியாக ரன் குவித்தனர். ஒரு கட்டத்தில் மயங்க் அகர்வால் ராகுலை முந்தி அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவித்தார். தொடர்ந்து அவர் ஓவருக்கு ஓவர் பவுண்டரி அடித்துக் கொண்டே இருந்தார். ராகுலும் அவருக்கு ஒத்துழைத்து ஆடினார்.

சிக்ஸ் மழை

சிக்ஸ் மழை

மயங்க் அகர்வால் தன் ஆட்டத்தில் 7 சிக்ஸ் அடித்து ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை திணற வைத்தார். ராகுல் ஒரு சிக்ஸ் மட்டுமே அடித்தார். மயங்க் அகர்வால் 10 ஃபோரும் அடித்தார். ராகுல் டேவாட்டியாவின் ஒரே ஓவரில் 19 ரன்கள் குவித்து மிரட்டினார் மயங்க்.

சதம்

சதம்

45 பந்துகளில் சதம் கடந்தார் மயங்க் அகர்வால். இது அவரது முதல் ஐபிஎல் சதம் ஆகும். 50 பந்துகளில் 106 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். இதுவே ஐபிஎல்-இல் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அவரது சதம் சாதனையும் படைத்துள்ளது.

சாதனை

சாதனை

ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 45 பந்துகளில் சதம் அடித்து இரண்டாம் இடம் பிடித்துள்ளார் மயங்க் அகர்வால். முதல் இடத்தில் 37 பந்துகளில் சதம் அடித்த யூசுப் பதான் இடம் பெற்றுள்ளார்.

கோலி, சேவாக்

கோலி, சேவாக்

மயங்க் அகர்வால் கோலி, சேவாக் உட்பட மூன்று இந்திய வீரர்களின் அதிவேக ஐபிஎல் சாதனையை முறியடித்துள்ளார். முரளி விஜய் (46 பந்துகள் - 2010), விராட் கோலி (47 பந்துகள் - 2016), வீரேந்தர் சேவாக் (48 பந்துகள் - 2011).

பஞ்சாப் ஸ்கோர்

பஞ்சாப் ஸ்கோர்

பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் 106, கேஎல் ராகுல் 69, நிக்கோலஸ் பூரன் 25* ரன்கள் குவித்தனர். ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Story first published: Sunday, September 27, 2020, 22:03 [IST]
Other articles published on Sep 27, 2020
English summary
IPL 2020 News in Tamil : RR vs KXIP - Mayank Agarwal breaks Kohli, Sehwag record after maiden century
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X