தம்பி.. விக்கெட் எடுத்துட்டு ஸீனா போடுற? இளம் வீரரை கலங்க வைத்து அனுப்பிய மயங்க் அகர்வால்!

ஷார்ஜா : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி கவனம் ஈர்த்தவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ராகுல் டேவாடியா.

அவர் விக்கெட் எடுத்த உடன் செய்த சைகை இணையத்தில் வைரல் ஆனது. யார் இவர்? என அனைவரையும் கேட்க வைத்தது.

முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்ட ராகுல், அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியிடம் மறக்க முடியாத அடி வாங்கினார்.

45 பந்தில் 100 ரன்.. கோலி, சேவாக் ரெக்கார்டை உடைத்தார்.. ஐபிஎல்-ஐ தெறிக்கவிட்ட மயங்க் அகர்வால்

ராகுல் டேவாட்டியா

ராகுல் டேவாட்டியா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருப்பவர் சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் ராகுல் டேவாட்டியா. உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ள இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கடந்த சீசனில் சில போட்டிகளில் ஆடினார்.

சிஎஸ்கே போட்டி

சிஎஸ்கே போட்டி

இந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் முதல் போட்டியில் அவர் பங்கேற்றார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் பேட்டிங்கில் 10 ரன்கள் எடுத்த அவர் அடுத்து பந்துவீச்சில் கலக்கினார். 3 விக்கெட் சாய்த்து சிஎஸ்கே அணியின் தோல்வியை உறுதி செய்தார்.

காதை மூடி..

காதை மூடி..

ராகுல் டேவாட்டியா ஒவ்வொரு முறை விக்கெட் எடுத்த பின்னும் காதை மூடி சைகை செய்தார். தன் மீதான விமர்சனத்துக்கு பதில் சொல்வது போல அது இருந்தது. அவரது செய்கையால் அவர் கவனம் பெற்றார். அவரது சிறப்பான பந்துவீச்சால் பாராட்டும் பெற்றார்.

பஞ்சாப் அதிரடி

பஞ்சாப் அதிரடி

இந்த நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் பங்கேற்றார். பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் மயங்க் அகர்வால் - கேஎல் ராகுல் அதிரடி ஆட்டம் ஆடி வந்தனர். மயங்க் அகர்வால் சிக்ஸ் மழை பொழிந்தார்.

ஒரே ஓவர்

ஒரே ஓவர்

அப்போது ராகுல் டேவாட்டியாவை நம்பி ஓவர் கொடுத்தார் ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். அந்த ஓவரில் 2வது மற்றும் 3வது பந்தில் சிக்ஸ் அடித்த மயங்க் அகர்வால், 4வது பந்தில் ஃபோர் அடித்தார். ஒரே ஓவரில் 19 ரன்கள் கொடுத்தார் ராகுல்.

மிரள வைத்த மயங்க்

மிரள வைத்த மயங்க்

மயங்க் அகர்வால் அவரது ஓவரை மட்டுமின்றி அனைவரின் ஓவரையும் புரட்டி எடுத்து ரன் குவித்து வந்தார். 45 பந்துகளில் சதம் கடந்து, 106 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரது ஆட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது ராகுல் டேவாட்டியா தான்.

ஓவரே கொடுக்கவில்லை

ஓவரே கொடுக்கவில்லை

ஸ்டீவ் ஸ்மித் அந்த மோசமான ஓவருக்கு பின் அவருக்கு பந்து வீச வாய்ப்பே கொடுக்கவில்லை. முதல் போட்டியில் 3 விக்கெட் எடுத்து காதை பொத்தி சைகை காட்டியது எல்லாம் ஒரே போட்டியில் ஒன்றும் இல்லாமல் போனது. அவரது நம்பிக்கையை உடைத்தது மயங்க் விளாசிய அந்த ஓவர்.

பஞ்சாப் ஸ்கோர்

பஞ்சாப் ஸ்கோர்

பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 106, கேஎல் ராகுல் 69, நிக்கோலஸ் பூரன் 25 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணிக்கு இது சவாலான இலக்கு என்றாலும் சிறிய மைதானம் என்பதால் அந்த அணியும் சேஸிங்கில் அதிரடி காட்டியது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020 News in Tamil : RR vs KXIP - Rahul Tewatia gave away 19 runs in an over
Story first published: Sunday, September 27, 2020, 22:29 [IST]
Other articles published on Sep 27, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X