என்ன நியாயம் இது.. தமிழக வீரரை ஏன் பயன்படுத்தவில்லை?.. சப்போர்ட்டுக்கு வந்த சச்சின்.. பாய்ச்சல்!

துபாய்: நேற்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தமிழகத்தை பவுலர் ஒருவரை பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லை என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் புகார் வைத்துள்ளார்.

நேற்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் நடந்த ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. கடைசி நொடி வரை சீட் நுனியில் அமர வைக்கும் திரில்லர் படம் போல, பல திருப்பங்கள், அதிரடிகளுடன் போட்டி முடிந்தது.

அதிலும் தொடக்கத்தில் ராஜஸ்தான் அணிக்காக அம்பி போல விளையாடிக் கொண்டு இருந்த ராகுல் திவாதியா தனக்குள் இருக்கும் அந்நியனை கடைசி நொடியில் வெளியே வர வைத்து, பஞ்சாப் பவுலர்களை பஞ்சு பஞ்சாக பறக்க வைத்தார்.

பஞ்சாப் பவுலிங்

பஞ்சாப் பவுலிங்

அதிலும் பஞ்சாப் அணியின் பவுலிங் தொடக்கத்தில் நன்றாக இருந்தாலும் கடைசி கட்டத்தில் மிக மோசமாக சொதப்பியது. பஞ்சாப் அணியின் ஸ்பின்னர்கள் மட்டுமே கொஞ்சம் ரன் செல்வதை கட்டுப்படுத்தினார்கள். அதிலும் ஸ்பீட் பவுலர்களின் பந்துகளை பிரித்து எடுத்த ராகுல் திவாதியா, சஞ்சு சாம்சன் இருவரும் ஸ்பின் பவுலிங்கில் நேற்று கொஞ்சம் நிதானம் காட்டினார்கள்.

நிதானம் காட்டினார்கள்

நிதானம் காட்டினார்கள்

நேற்று பஞ்சாப் அணிக்காக பவுலிங் செய்த முருகன் அஸ்வின் அதிக கவனம் ஈர்த்தார். ஏனென்றால் பெங்களூர் மற்றும் பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் முருகன் அஸ்வினின் லெக் ஸ்பின் பஞ்சாப் அணிக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. முக்கியமான விக்கெட்டுகளை எடுக்க முருகன் அஸ்வின் போட்ட கூக்ளி பெரிய அளவில் உதவியது.

அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே

அதுவும் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தற்போது முருகன் அஸ்வினுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறார். இதனால் முருகன் அஸ்வின் பவுலிங் நேற்று போட்டியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவருக்கு நேற்று இரண்டு ஓவர் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதிலும் இரண்டாவது ஓவரில் 3 பந்துகள் போடும் போதே போட்டி முடிந்துவிட்டது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

நேற்று மைதானம் ஸ்பின் பவுலிங்கிற்கு நன்றாக கைகொடுத்தது. ஆனாலும் முருகன் அஸ்வினுக்கு கே.எல் ராகுல் ஓவர் கொடுக்கவில்லை. இதுதான் தற்போது கேள்விகளை எழுப்பி உள்ளது. நேற்று ஸ்பீட் பவுலிங்கில் ரன் செல்கிறது. விக்கெட் விழவில்லை என்று தெரிந்தும் ஏன் முருகன் அஸ்வின் போன்ற ஸ்பின் பவுலருக்கு சரியாக ஓவர் கொடுக்கவில்லை.

ஒரே ஒரு ஓவர்

ஒரே ஒரு ஓவர்

ஒரே ஒரு ஓவர் கொடுத்தால் என்ன அர்த்தம். முருகன் அஸ்வினுக்கு முன்பே ஓவர் கொடுத்து இருந்தால் ராகுல் திவாதியா விக்கெட் விழுந்திருக்கும். போட்டியே மாறி இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் முருகன் அஸ்வினுக்கு ஆதரவாக பேசி உள்ளார் .

சச்சின் கருத்து

சச்சின் கருத்து

இது தொடர்பாக சச்சின் தெரிவித்துள்ள கருத்தில் ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் ஸ்மித், சஞ்சு சாம்சன், திவாதியா எல்லோரும் சிறப்பாக ஆடினார்கள். அதிரடியாக ஆடி மெகா சேஸிங்கை செய்துள்ளனர். கூலாக, டென்ஷன் இன்றி அழகாக ஆடினார்கள்.

யார்க்கர்

யார்க்கர்

நேற்று பஞ்சாப் அணியின் பாஸ்ட் பவுலர்கள் சரியாக யார்க்கர் வீசவில்லை, அதேபோல் நன்றாக பவுலிங் செய்த முருகன் அஸ்வினை கேப்டனும் முழுமையாக பயன்படுத்தவில்லை என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்... சச்சின் மட்டுமின்றி கிரிக்கெட் வல்லுநர்கள் இன்னும் பலர் முருகன் அஸ்வினுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: Sachin support Tamilnadu palyer for a better chance against Rajasthan yesterday.
Story first published: Monday, September 28, 2020, 15:37 [IST]
Other articles published on Sep 28, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X