இப்போ வந்து இப்படி பேசுறீங்களே.. வெட்கமே இல்லையா பாஸ்.. சிஎஸ்கே மேட்ச்.. வசமாக சிக்கிய பிரபலம்!

துபாய்: சிஎஸ்கே அணி நேற்று கொல்கத்தாவிற்கு எதிராக வெற்றிபெற்ற நிலையில் முக்கியமான கிரிக்கெட் வீரர் ஒருவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர் தன்னுடைய சர்ச்சையான கருத்துக்களால் பிரபலம் ஆனவர். முக்கியமாக சிஎஸ்கே வீரர்களையும், பெங்களூர் வீரர்களையும் சீண்டுவதே இவரின் வேலை.

மும்பை வீரர்கள் மோசமாக ஆடினாலும் அவர்களுக்கு ஆதரவு தருவது, மற்ற அணி வீரர்கள் சிறப்பாக ஆடினாலும் கூட அவர்களை கிண்டல் செய்வது, விமர்சனம் செய்வதுதான் சஞ்சய் மஞ்சிரேக்கரின் வேலை.

நீக்கம்

நீக்கம்

ஒரு கிரிக்கெட் விமர்சகர் வர்ணனை செய்யும் போது பாரபட்சம் இன்றி பேச வேண்டும். ஆனால் இந்தியராக இருந்து கொண்டு மற்ற இந்திய வீரர்களையே சர்வதேச போட்டிகளில் இவர் அசிங்கப்படுத்தி இருக்கிறார். இவரின் மோசமான விமர்சனங்களால் மொத்தமாக தற்போது வர்ணனை குழுவில் இருந்தே இவர் நீக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக போய்விட்டார்

மொத்தமாக போய்விட்டார்

அதிலும் இவருக்கும் ஜடேஜாவிற்கும் இடையில் கடந்த இரண்டு வருடமாக பகை இருக்கிறது. ஜடேஜா எப்போது களத்திற்கு வந்தாலும் அவரை மோசமாக விமர்சனம் செய்வதும், கிண்டல் செய்வதும்தான் இவரின் வேலை. ஏனோ ஜடேஜா என்றாலே இவருக்கு ஆகாது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய டி 20 அணியில் ஜடேஜா தேர்வானதை மஞ்சிரேக்கர் விமர்சனம் செய்து இருந்தார்.

விமர்சனம்

விமர்சனம்

ஜடேஜா சரியான டி 20 வீரர் கிடையாது. அவரை அணியில் எடுத்து இருக்க கூடாது என்று மஞ்சிரேக்கர் விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு ஜடேஜா தனது பேட்டிங் மூலம் நேற்று பதிலடி கொடுத்தார். 11 பந்தில் 31 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணியை ஜடேஜா வெற்றிபெற வைத்தார். மஞ்சிரேக்கரின் விமர்சனத்திற்கு ஒரே நாளில் ஜடேஜா அதிரடி பதிலடி கொடுத்தார்.

பதிலடி கொடுத்தார்

பதிலடி கொடுத்தார்

இந்த நிலையில்தான் தற்போது ஜடேஜாவை மஞ்சிரேக்கர் பாராட்டி உள்ளார். சிஎஸ்கேவின் வெற்றியை பார்க்கக் சந்தோசமாக இருக்கிறது. ரூத்துராஜ் சிறப்பாக தொடக்கம் கொடுத்தார்.. ஜடேஜா ஆட்டத்தை சிறப்பாக பினிஷ் செய்தார். ப்ரில்லியண்ட், என்று ஜடேஜாவை பாராட்டி உள்ளார்.

பாராட்டு

பாராட்டு

இந்த நிலையில் தற்போது சஞ்சய் மஞ்சிரேக்கரை இணையத்தில் பலரும் விமர்சனம் செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஜடேஜாவை இப்படித்தான் பேசுகிறீர்கள். ஆனால் ஜடேஜா உங்களுக்கு வசமாக பதிலடி கொடுக்கிறார். பல முறை உங்களுக்கு ஜடேஜா வசமாக பதிலடி கொடுத்தும்.. ஏன் வெட்கமே இல்லாமல் அவரை மீண்டும் மீண்டும் சீண்டுகிறீர்கள்.. என்று பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: Sanjay Manjrekar congratulates Jadeja for yesterday match, fans trolls him
Story first published: Friday, October 30, 2020, 10:48 [IST]
Other articles published on Oct 30, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X