அவசியமே இல்லை.. யாரை பார்த்து தோனின்னு சொன்னீங்க? சசி தரூர் மீது பாய்ந்த கம்பீர்.. என்ன நடந்தது?

டெல்லி: நேற்று நடந்த பஞ்சாப் - ராஜஸ்தான் இடையிலான ஐபிஎல் போட்டி காரணமாக தற்போது காங்கிரஸ் எம்பி சசி தரூர் மீது பாஜக எம்பி கவுதம் கம்பீர் பாய்ந்து உள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டி தொடக்கத்தில் இருந்து இறுதி வரை விறுவிறுப்பாக சென்றது. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய இரண்டு அணிகளும் அதிரடியாக ஆடியது.

ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராகுல் திவாதியா என்று எல்லோரும் மாஸ் ஆட்டம் ஆடினார்கள். முக்கியமாக கடைசி கட்டத்தில் வந்த ராகுல் திவாதியா போட்டியின் போக்கையே மாற்றினார்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

நேற்று நடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். ஸ்மித் அவுட்டான போது கூட சஞ்சு சாம்ஸன் தெறி ஆட்டம் போட்டார். நேற்று ஒரு பக்கம் ஸ்மித் அரை சதம் அடித்தார். இன்னொரு பக்கம் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். இதில் 7 சிக்ஸ், 4 பவுண்டரி அடக்கம்.

மாஸ் ஆட்டம்

மாஸ் ஆட்டம்

சஞ்சு சாம்சன் தற்போது முழு பார்மில் உள்ளார். கடந்த ஒரு வருடமாக இவர் ஐபிஎல் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வந்தார். இதற்காக அவர் சிறப்பு பயிற்சி எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தற்போது இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வருகிறார்.

சிறப்பான ஆடடம்

சிறப்பான ஆடடம்

கடந்த போட்டியிலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடினார். சென்னைக்கு எதிரான போட்டியில் வெறும் 32 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் மட்டும் அவர் 9 சிக்ஸ் அடித்தார். அந்த அளவிற்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் பார்மில் இருக்கிறார்.

தோனி

தோனி

சஞ்சு சாம்சனை தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் தோனியோடு ஒப்பிட்டு வருகிறார்கள். அடுத்த தோனி இவர்தான். நன்றாக பேட்டிங் செய்கிறார். அதேபோல் நன்றாக கீப்பிங் செய்கிறார். இந்திய அணியில் இவரை எடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

சசி தரூர்

சசி தரூர்

சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்தவர். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் சஞ்சு சாம்சனை பாராட்டினார். அதில், சஞ்சு சாம்சன் இப்படி அதிரடியாக ஆடுவார் என்று எனக்கு முன்பே தெரியும். பல வருடமாக அவரை எனக்கு தெரியும். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது என்று 10 வருடத்திற்கு முன்பே சொல்லி இருக்கிறேன்.

அடுத்த தோனி

அடுத்த தோனி

நீதான் அடுத்த தோனி என்று அவருக்கு 14 வயது இருக்கும் போதே சொல்லி இருக்கிறேன். அந்த நாள் தற்போது வந்துவிட்டது. அவரின் கடந்த இரண்டு போட்டிகள் இதற்கு சாட்சி. ஒரு உலகத்தரமான வீரர் கிரிக்கெட் உலகிற்கு வந்துவிட்டார் என்று அவரின் ஆட்டத்தை பார்த்தாலே தெரியும், என சசி தரூர் குறிப்பிட்டு இருந்தார்.

கம்பீர் பதிலடி

கம்பீர் பதிலடி

இந்த நிலையில் தரூரின் இந்த கருத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் பாஜக எம்பி கவுதம் கம்பீர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில் சஞ்சு சாம்சன் அடுத்த தோனி எல்லாம் கிடையாது. யாரும் இன்னொரு வீரர் ஆக வேண்டிய அவசியம் இல்லை. அவர் இந்திய கிரிக்கெட்டின் முதல் சஞ்சு சாம்சன், அவரை வேறு யாருடனும் ஒப்பிட கூடாது என்று கம்பீர் குறிப்பிட்டுள்ளார். கம்பீருக்கும் தோனிக்கும் கடந்த பல வருடங்களாக மோதல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: Sanju Samson is not the next Dhoni says Gambhir to Sashi Tharoor
Story first published: Monday, September 28, 2020, 9:42 [IST]
Other articles published on Sep 28, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X