For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உறுத்தலான விஷயம்.. ஐபிஎல்லின் சூப்பர்ஸ்டார் என கருதப்பட்டவருக்கு இப்படி ஒரு நிலையா? என்ன நடந்தது?

துபாய்: 2020 ஐபிஎல் தொடரின் சூப்பர் ஸ்டார் என்று கருதப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு எதிராக தற்போது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

2020ம் வருட ஐபிஎல் தொடர் பல இளம் வீரர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சஞ்சு சாம்சன்,நடராஜன்,வாஷிங்டன் சுந்தர், படிக்கல் என்ற பல வீரர்கள் வெளியுலகத்திற்கு தெரிய தொடங்கி உள்ளனர்.

அதிலும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் தூணாக கருதப்படுகிறார். இவரின் அதிரடி பேட்டிங் காரணமாகவே ராஜஸ்தான் தொடக்கத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் கடந்த சில போட்டிகளாக சஞ்சு சாம்சன் சரியாக பேட்டிங் செய்யவில்லை. கடந்த மூன்று போட்டிகளாக சஞ்சு சாம்சன் ஒரு இலக்க ரன்களில் அவுட்டாகி வருகிறார். 8, 4, 0 இதுதான் கடந்த மூன்று போட்டிகளாக அவர் எடுத்த ரன்கள். தொடக்கத்தில் நடந்த போட்டிகளில் 70,80 என்று என்று இவர் பெரிய அளவில் நம்பிக்கை அளித்தார்.

நம்பிக்கை

நம்பிக்கை

ஆனால் அதன்பின் வரிசையாக தோல்விகளை தழுவி வருகிறார். கடந்த 2018, 2019 ஐபிஎல் போட்டிகளிலும் இவர் இதேபோல்தான் ஆடினார். முதல் மூன்று போட்டிகளிலும் அதிரடியாக ஆடிவிட்டு, அதன்பின் தொடர் முழுக்க மோசமாக பேட்டிங்செய்தார். எப்போதும் இவர் அடிக்கும் மொத்த ரன்களில் 40% ரன்கள் முதல் மூன்று போட்டிகளில் எடுக்கும் ரன்தான்.

ஷார்ட் பால்

ஷார்ட் பால்

எப்போதும் ஷார்ட் பால்களில் மோசமாக ஆடும் சஞ்சு சாம்சன் இந்த முறை கொஞ்சம் ஷார்ட் பந்துகளை எதிர்கொள்ள கற்றுகொண்டார்.ஆனால் தொடர் செல்ல செல்ல மீண்டும் ஷார்ட் பந்துகளில் திணற தொடங்கி உள்ளார். கடந்த மூன்று போட்டிகளில் இவர் இரண்டு முறை ஷார்ட் பந்துகளில்தான் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வி

தோல்வி

இதனால் இவர் ராஜஸ்தான் அணியின் தோல்விக்கும் காரணமாக பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் குறித்த உண்மை ஒன்றை கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர் தற்போது தெரிவித்துள்ளார். அதில், சஞ்சு சாம்சனை மிகைப்படுத்த கூடாது. அவரின் ஐபிஎல் ஆட்டத்தை வைத்து மட்டுமே அவர் எடை போட கூடாது. அவர் முதல் தர போட்டிகளில் சராசரியாக 37 ரன்கள் மட்டுமே அடிக்கிறார்.

மோசம்

மோசம்

இது ஒன்றும் சிறப்பான ஸ்கோர் கிடையாது. மாறாக சராசரியாக மயங்க் அகர்வால் 57 ரன்கள் எடுக்கிறார். சுப்மான் கில் 73 ரன்கள் எடுக்கிறார். இதனால் சஞ்சு சாம்சனை பெரிதாக நினைக்க கூடாது. அவர் என்ன பார்மட்டில் ஆடுகிறார் என்பது முக்கியம் இல்லை. அவரின் முதல்தர போட்டிகளை பார்த்தாலே அவரின் பேட்டிங் பின்னணி தெரிந்துவிடும் .

தவறு

தவறு

சஞ்சு சாம்சனை நினைத்தால் எனக்கு எப்போதும் இதுதான் உறுத்தலாக இருக்கும் . அவர் மயங்க் அகர்வால் போலவும், சுப்மான் கில் போலவும் சிறப்பான வீரர் கிடையாது. தொடர்ச்சியாக அவர் சிறப்பாக பேட்டிங் செய்தது கிடையாது. இதனால் அவரை பெரிய அளவில் மிகைப்படுத்தி பேச கூடாது. அவர் தொடர்ச்சியாக ஆட்டங்களில் சிறப்பாக ஆட வேண்டும் என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, October 7, 2020, 13:24 [IST]
Other articles published on Oct 7, 2020
English summary
IPL 2020: Sanju Samson may be overhyped - Sanjay Manjerekkar reveals the data.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X