For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சஞ்சு கையில பேட்ட கொடுத்துட்டா போதும்... மத்ததெல்லாம் அவர் பார்த்துப்பாரு.. ஸ்மித் பாராட்டு

ஷார்ஜா : சஞ்சு சாம்சன் நம்ப முடியாத பேட்ஸ்மேன் என்றும் அவரிடம் பேட்டை கொடுத்துவிட்டால் மற்றவற்றை அவர் பார்த்துக் கொள்வார் என்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன் எந்த பந்தை அடித்தாலும் அது சிக்ஸாக மாறிவிடுவதாகவும் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216 ரன்களை அடித்து 16 ரன்களில் வென்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

 அவுட்டுன்னா அவுட்தான்.. என்ன இதெல்லாம்? போட்டி நடக்கும் போதே பொங்கிய சாக்ஷி தோனி.. வெடித்த சர்ச்சை அவுட்டுன்னா அவுட்தான்.. என்ன இதெல்லாம்? போட்டி நடக்கும் போதே பொங்கிய சாக்ஷி தோனி.. வெடித்த சர்ச்சை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கேவிற்கு எதிராக நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் 216 ரன்களை குவித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடியாக ஆடியது. இந்த தொடரில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஸ்கோர் இது. தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே, மெதுவாக ஆடி பின்பு அதிரடி காட்டினாலும் 200 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதையடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்தது.

ஸ்கோரை உயர்த்திய சாம்சன்

ஸ்கோரை உயர்த்திய சாம்சன்

ஐபிஎல் துவங்கி தன்னுடைய முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இத்தகைய அதிரடியை காட்டியுள்ளது. அணியின் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சிலர் இல்லாத நிலையிலும் இளம் வீரர்கள் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர். அணியின் சஞ்சு சாம்சன் 74 ரன்களையும் ஸ்டீவ் ஸ்மித் 69 ரன்களையும் அடித்து சிஎஸ்கே தொட முடியாத அளவில் ஸ்கோரை உயர்த்தினர்.

ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடி

ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடி

ஜோப்ரா ஆர்ச்சரும் தன்னுடைய பங்கிற்கு இறுதி ஓவரில் 4 சிக்ஸ்களை அடித்து அதிரடி செய்தார். இந்நிலையில் சாம்சன் மற்றும் ஆர்ச்சரின் பேட்டிங் மிகவும் சிறப்பானது என்று ஸ்டீவ் ஸ்மித் புகழ்ந்துள்ளார். சஞ்சு சாம்சன் மிகவும் வியப்பான வீரர் என்றும் அவரிடம் பேட்டை கொடுத்து ஆடவிட்டால் மற்றதை அவர் பார்த்துக் கொள்வார் என்றும் அவர் மேலும் கூறினார்.

சிறப்பான ஸ்பின்னர்கள்

சிறப்பான ஸ்பின்னர்கள்

ஸ்ரெய்ட் ஹிட்களை பௌலர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் ஸ்மித் அறிவுறுத்தியுள்ளார். அணியின் லெக் ஸ்பின்னர்கள் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். ஷ்ரேயாஸ் கோபால் மிகவும் சிறப்பான பௌலர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். துபாய் மைதானத்தில் தான் பயிற்சி பெற்றதிலலை என்றாலும அணி வீரர்கள் சிறப்பாக தயாராகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Wednesday, September 23, 2020, 13:22 [IST]
Other articles published on Sep 23, 2020
English summary
Dubai is a lot bigger and I haven’t trained there, the boys are ready for it -Smith
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X